Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
Chettinad Mutton Getti Kuzhambu Recipe In Tamil: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே உங்கள் வீட்டில் மட்டன், சிக்கன் வாங்கி, வாய்க்கு ருசியாக சமைத்து, பொறுமையாக ருசித்து சாப்பிடுவீர்களா? இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் வாங்க போகிறீர்களா? பெரும்பாலும் மட்டன் வாங்கினால் தவறாமல் அதை குழம்பு வைத்து சாப்பிடுவீர்களா?
அப்படியானால் வழக்கமாக செய்யும் மட்டன் குழம்பை செய்யாமல், செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பை செய்யுங்கள். இந்த குழம்பு இட்லி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த பக்குவத்தில் மட்டன் குழம்பை செய்தால், பின் எப்போதும் இப்படி தான் மட்டன் குழம்பு செய்வீர்கள்.

உங்களுக்கு இந்த செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 50 மிலி
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கல்பாசி - சிறிது
* பட்டை - 2 துண்டு
* பிரியாணி இலை - 2
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மட்டன் - 3/4 கிலோ
* தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 மூடி
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கல்பாசி, பட்டை, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து,
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப
உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வாக்க
வேண்டும்.
* பிறகு அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து
குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மட்டனை கழுவி சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின்னர் அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 4-5 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். பின் அதில் அரைத்த
தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து,
1 கொதி விட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
