இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா?

தற்போதைய காலகட்டத்தில் தினமும் ஒரு போட்டோவாவது எடுக்காமல் ஒரு நாள் கூட கழியாது. நேரத்தை நிறுத்தி நினைவுகளை படம் பிடிக்கும் சக்தி போட்டோக்குத்தான் உள்ளது. தற்போது அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கேமரா இருப்பதால் போட்டோ எடுப்பது என்பது மிகவும் எளிதானதாக உள்ளது, ஆனால் கடந்த காலத்தில் போட்டோ எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை.

Who Is the First Photographer in India

புகைப்படத் துறையில் இந்தியா ஒரு செழுமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தியாவில் புகைப்படக் கலையின் வரலாறு 1800-களில் தொடங்கியது. காலப்போக்கில், இது சிறப்புமிக்க தருணங்கள், வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பதிவு செய்வதற்கான ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக மாறியது. ஆனால், இந்தியாவிற்குப் புகைப்படக் கலையைக் கொண்டு வந்தது யார் என்றும், இந்தியாவின் முதல் புகைப்படக் கலைஞர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கான விடை சிக்கலானது என்றாலும், இந்த வரலாற்றின் மையப்புள்ளியாக ஒருவர் திகழ்கிறார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பணியாற்றியவர், பின்னர் அரசவை புகைப்படக் கலைஞராகவும் பதவி வகித்தார்.

இந்தியாவின் முதல் புகைப்படக் கலைஞராகக் கருதப்படுபவர் யார்?

ராஜா தீன் தயாள் (1844 - 1905) இந்தியாவின் முதல் புகைப்படக் கலைஞராகக் கருதப்படுகிறார். புகைப்படத் துறையை தனது தொழிலாக அமைத்துக்கொண்ட முதல் இந்தியர் இவரே என்பதால், வரலாற்றாசிரியர்கள் இவருக்கு இத்தகைய அங்கீகாரத்தை அளித்துள்ளனர். தீன் தயாள் முன்னதாக பிரிட்டிஷ் அரசாங்கத்தில் நில அளவையாளராகப் பணியாற்றினார். 1874-ஆம் ஆண்டில் புகைப்படம் எடுப்பதை ஒரு பொழுதுபோக்காகக் கற்றுக்கொண்டார்.

அரசவை புகைப்பட கலைஞர்

காலப்போக்கில் புகைப்படம் எடுப்பதில் அவரின்ஆர்வம் அதிகரித்தது. 1885-ஆம் ஆண்டில் அதனை ஒரு முழுநேரத் தொழிலாக மாற்றிக்கொள்ள அவர் முடிவு செய்தார். அதன்பின் இரண்டே ஆண்டுகளில், அக்காலத்தின் மிகச்சிறந்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவராக அவர் உயர்ந்தார். ஹைதராபாத்தின் ஆறாவது நிஜாமின் அரசவை புகைப்படக் கலைஞராக அவர் நியமிக்கப்பட்டது அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையாக மாறியது. இந்தப்பணி அவருக்கு அரச குடும்பத்தினரையும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அணுகும் வாய்ப்பைக் கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர்கள் உட்பட வெகு சில புகைப்படக் கலைஞர்களுக்கு மட்டுமே இத்தகைய வாய்ப்பு கிடைத்திருந்தது.

இந்தியாவில் கேமராவை பயன்படுத்திய முதல் நபர் யார்?

ராஜா தீன் தயாள் இந்தியாவின் முதல் புகைப்பட கலைஞராக அறியப்பட்டாலும், கேமராவை முதன்முதலில் பயன்படுத்திய நபர் யார் என்பது இன்றும் அறியப்படவில்லை. இந்தியாவில் கேமராவைப் பயன்படுத்திய முதல் நபர் ஜூலஸ் லெஜர் என்ற பிரெஞ்சுக்காரர் என்று சில குறிப்புகள் குறிப்பிடுகின்றன. அதேவேளையில், ஜோசியா ரோவ்தான் முதன் முதலில் கேமராவை பயன்படுத்தியவர் என்று வேறு சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், புகைப்படக் கலையை ஒரு தொழிலாக மாற்றிய முதல் இந்தியராக தீன் தயாள் நினைவுகூரப்படுகிறார்.

இந்தியாவிற்குள் புகைப்பட காலை எவ்வாறு நுழைந்தது?

1850-களில் புகைப்படம் எடுக்கும் கலை இந்தியாவிற்குள் நுழைந்தது. இது முதன் முதலில் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. 1840-களின் மத்தியிலேயே கல்கத்தாவில் கேமராக்கள் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கின. ஆரம்பகால புகைப்படம் எடுத்தல் முறையில், புகைப்படக் கலைஞர்கள் கனமான உபகரணங்கள் மற்றும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்த வேண்டியிருந்ததுடன், நீண்ட நேரம் 'எக்ஸ்போஷர்' தேவைப்படும் கடினமான வழிமுறைகளும் பின்பற்றப்பட்டன. இந்தக் காரணங்களால், பணக்காரர்களும், ஆங்கிலேய அதிகாரிகள் மட்டுமே இச்சேவையை பெருமளவில் பயன்படுத்தினர்.

இந்தியாவின் முதல் புகைப்படக் கலைஞர்கள் எதை போட்டோ எடுத்தனர்?

ஆரம்பகால இந்தியப் புகைப்படங்கள் பெரும்பாலும் தாஜ் மஹால் மற்றும் பொற்கோவில் போன்ற புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களையே மையமாகக் கொண்டிருந்தன. மேலும், புகைப்படக் கலைஞர்கள் மகாராஜாக்கள், பிரபுக்கள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் உருவப்படங்களையும் படம்பிடித்தனர். 1857-ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிந்தைய காட்சிகள் போன்ற குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளையும் சில படங்கள் பதிவு செய்துள்ளன. அன்றாட இந்திய வாழ்க்கை, திருவிழாக்கள் மற்றும் நிலப்பரப்புகளைக் காட்டும் பல படங்கள் இன்றும் கிடைக்கின்றன.

Story first published: Tuesday, September 22, 2026, 21:11 [IST]
Desktop Bottom Promotion