புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?

Mercury Transit In Chithirai Nakshatra 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக கருதப்படும் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகிவற்றின் காரணியாவார். கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியான புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்.

Mercury Transit In Chithirai Nakshatra 2026 List Of Unlucky Zodiac Signs

தற்போது புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பயணித்து வருகிறார். மேலும் செப்டம்பர் 21 ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த நட்சத்திரத்தில் அக்டோபர் 01 ஆம் தேதி வரை இருப்பார். இந்த சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் ஆவார். செவ்வாயின் நட்சத்திரத்திற்குள் புதன் நுழைந்திருப்பது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

கன்னி

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கிய விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தால், வெற்றி காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

மகரம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக தலைவலி, செரிமான பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும். பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். கூட்டு தொழில் செய்பவர்கள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்காமல் போகும். இதன் மூலம் மிகுந்த மன வருத்தம் அடைவீர்கள். கடனாக யாருக்கும் பணம் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காமல் போகலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் மோதல்களைத் தவிர்க்க வேண்டும்.

மீனம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் மூலம் உங்களின் வேலை பாதிக்கப்படலாம். இக்காலத்தில் கவனக்குறைவாக இருப்பதையும், அவசரப்படுவதையும் தவிர்க்க வேண்டும். காதல் திருமணத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். பணத்தை சம்பாதிக்க நிறைய முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். இருப்பினும், புதனின் தாக்கம் தொழிலை பாதிக்கும். புதிய நட்புகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, September 22, 2026, 23:35 [IST]
Desktop Bottom Promotion