3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..

Posted By:

Carrot Ghee Roast Recipe In Tamil: உங்கள் வீட்டில் கேரட்டை எப்போதும் பொரியல் அல்லது சாம்பார் தான் செய்து சாப்பிடுவீர்களா? அந்த கேரட்டை சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் கேரட் கீ ரோஸ்ட் செய்யுங்கள். இந்த கீ ரோஸ்ட் பன்னீர், காளானை போன்று மிகவும் ருசியாக இருக்கும். இதை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் உங்களுக்கு புதுமையான சைவ ரெசிபிக்களை ட்ரை செய்து சாப்பிட தோன்றினால், இந்த கேரட் கீ ரோஸ்ட்டை ட்ரை செய்து பாருங்கள். நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Carrot Ghee Roast How To Make Carrot Ghee Roast Recipe

உங்களுக்கு கேரட் கீ ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் கீ ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கீ ரோஸ்ட் மசாலாவிற்கு...

* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 8-10
* முந்திரி - 8-10
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு..

* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 3 (தோல் நீக்கி வட்டத் துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த மசாலா
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, வெந்தயம், கடுகு, வரமிளகாய், முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், கேரட் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ப்ரை செய்து வைத்துள்ள கேரட் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், கேரட் கீ ரோஸ்ட் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 22, 2026, 21:45 [IST]
Desktop Bottom Promotion