Latest Updates
-
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா?
நாவூற செய்யும்... செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல்
உங்கள் வீட்டிலேயே செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய விரும்புகிறீர்களா? அதிலும் செட்டிநாடு என்றாலே மட்டன் சுக்கா தான் நினைவிற்கு வரும். அந்த செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் ரெசிபியை வீட்டில் செய்ய வேண்டுமா?
உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் ரெசிபிக்கள் பிடிக்குமா? உங்கள் வீட்டிலேயே செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய விரும்புகிறீர்களா? அதிலும் செட்டிநாடு என்றாலே மட்டன் சுக்கா தான் நினைவிற்கு வரும். அந்த செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் ரெசிபியை வீட்டில் செய்ய வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனென்றால், கீழே செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* தண்ணீர் - 1 கப்
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 கப்
* கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் கழுவிய மட்டனைப் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து பிரட்டி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும், 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் ஊற வைத்துள்ள மட்டனையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் ஒரு கப் நீரை ஊற்றி கிளறி விட்டு, குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின்பு அதில் சோம்பு, பட்டை சேர்த்து தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். இப்போது குக்கரில் உள்ள மட்டனை அப்படியே கடாயில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* கிரேவியில் உள்ள நீர் வற்றி நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு மேலே கொத்தமல்லியைத் தூவினால், செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் ரெடி!



Click it and Unblock the Notifications










