Latest Updates
-
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்..
செட்டிநாடு முட்டை பொடிமாஸ்
முட்டையை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று முட்டை பொடிமாஸ். உங்களுக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்குமானால், செட்டிநாடு ஸ்டைலில் முட்டை பொடிமாஸ் செய்து சுவையுங்கள்.
முட்டை அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்றாகும். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படிப்பட்ட முட்டையை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று முட்டை பொடிமாஸ். உங்களுக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்குமானால், செட்டிநாடு ஸ்டைலில் முட்டை பொடிமாஸ் செய்து சுவையுங்கள். இது ருசியாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

கீழே செட்டிநாடு முட்டை பொடிமாஸ் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 6
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
* பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
* பின்னர் அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
* முட்டை நன்கு வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
