Latest Updates
-
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம்
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
Chettinad Mullangi Kootu Recipe in Tamil: உங்கள் வீட்டில் முள்ளங்கி செய்தாலே, யாரும் சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களை முள்ளங்கியை ரசித்து சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் அந்த முள்ளங்கியுடன் பாசிப்பருப்பு சேர்த்து செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செய்யுங்கள். இந்த முள்ளங்கி கூட்டு நீங்கள் வழக்கமாக சாப்பிடும் கூட்டு போல இருக்காது.. இப்படி செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதுவும் இதை சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக மட்டுமின்றி, சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.

பொதுவாக கூட்டு என்பது பூசணிக்காய், சுரைக்காய் மற்றும் புடலங்காயை வைத்துதான் செய்வார்கள், ஆனால் உண்மையில் சில வித்தியாசமான காய்கறிகளை வைத்து கூட்டு செய்யலாம். அப்படி ஒரு காய்தான் முள்ளங்கி, ஏனெனில் முள்ளங்கியை வைத்து சாம்பார் அல்லது குருமாதான் செய்வார்கள். ஆனால் முள்ளங்கியை வைத்து சூப்பரான கூட்டு செய்யலாம்.
உங்களுக்கு சுவையான செட்டிநாடு முள்ளங்கி கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு முள்ளங்கி கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 முள்ளங்கி (பொடியாக நறுக்கியது)
- தேவையான அளவு உப்பு
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு தண்ணீர்
- ½ கப் பாசிப்பருப்பு
- 1 ஸ்பூன் சமையல் எண்ணெய்
அரைப்பதற்கு:
- 1 கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய்
- 1 ஸ்பூன் அரிசி மாவு
தாளிக்க:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 வர மிளகாய்
- 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
செய்முறை:
- பாசிப்பருப்பைக் கழுவி, அதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து தேவையான அளவு நீரில் அது நன்கு வேகும் வரை சமைத்து தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் ஒரு தேங்காய் துருவல், சீரகம், வர மிளகாய் மற்றும் அரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் துருவிய முள்ளங்கியைச் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வதக்கவும்.
- அதனுடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி, முள்ளங்கி நன்கு வேகும் வரை சமைக்கவும்.
- பின்னர் வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் அரைத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- தேங்காய் பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- அதன்பின் ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் அதில் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பருப்பு பொன்னிறமாக மாறியதும் வர மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அதை கொதிக்க வைத்த கூட்டில் ஊற்றி நன்கு கிளறினால் சுவையான முள்ளங்கி கூட்டு ரெடி!



Click it and Unblock the Notifications
