Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
ருசியான... செட்டிநாடு குழி பணியாரம் செய்வது எப்படி?
உங்கள் வீட்டில் உள்ளோர் பணியாரத்தை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பணியாரத்தை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு குழி பணியாரத்தை செய்து கொடுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் பணியாரத்தை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பணியாரத்தை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு குழி பணியாரத்தை செய்து கொடுங்கள். இந்த செட்டிநாடு குழி பணியாரம் செய்வது மிகவும் சுலபம். இந்த பணியாரத்தை காலை உணவாகவும், இரவு உணவாகவும் சாப்பிடலாம். இந்த பணியாரத்திற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி போன்றவை சிறந்த சைடு டிஷ்களாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு குழி பணியாரம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு குழி பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
செய்முறை:
* முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை நீரில் 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதை நன்கு கழுவி, கிரைண்டர் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி, அத்துடன் உப்பு சேர்த்து கலந்து, மூடி வைத்து குறைந்தது 8 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் நொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, சிறிது உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அடுத்து வதக்கியதை பணியார மாவில் சேர்த்து கிளற வேண்டும். இப்போது பணியார மாவு தயார்.
* பின்பு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், சிறு குழி கரண்டியில் பணியார மாவை எடுத்து, பணியாரக் குழிகளில் ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் பணியாரத்தை திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், செட்டிநாடு குழி பணியாரம் தயார். இந்த பணியாரம் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
குறிப்பு:
* இந்த பணியார மாவுடன் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம்.
* வீட்டில் தோசை மாவு இருந்தால், அதைக் கொண்டும் குழி பணியாரம் செய்யலாம்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications