Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த காரைக்குடி வெங்காய கார குழம்பு செய்யுங்க... டேஸ்ட் செமையா இருக்கும்...!
Chettiand Vengaya Kulambu Recipe in Tamil: தினமும் ஒரே மாதிரியான சாம்பார், புளிக்குழம்பு செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி செய்பவர்களுக்கும் போரடித்து விடும். அப்படியானால் இந்த செட்டிநாடு ரெசிபிக்களை முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக இந்த செட்டிநாடு வெங்காய குழம்பை முயற்சி செய்து பாருங்கள். வெங்காயம் என்பது அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருளாகும், சொல்லப்போனால் வெங்காயம் இல்லாமல் சமையல் என்பதே கிடையாது.
சின்ன வெங்காயம் வைத்து செய்யப்படும் இந்த செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் இந்த கார குழம்பை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த செட்டிநாடு வெங்காய குழம்பு சுவையாக இருப்பதுடன் செய்வதற்கும் மிகவும் எளிதானதாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் வெங்காய கார குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
- புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
அரைக்க:
- தனியா - 2 டீஸ்பூன்
- கடலை பருப்பு - ஒன்றரை டீஸ்பூன்
- வெந்தயம் - அரை டீஸ்பூன்
- தேங்காய் துருவல் - கால் கப்
- காய்ந்த மிளகாய் - 2
தாளிக்க:
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - கால் டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - அரை டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- பச்சை மிளகாய் - 1
செய்முறை :
- முதலில் அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் வாணலியில் தனி தனியாக வறுத்து நன்கு பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- புளியை 2 கப் தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும்.
- வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளித்து கொள்ளவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.
- அதனுடன் வறுத்து அரைத்த பொடி மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறவும்.
பின்னர் கரைத்து வைத்த புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- குழம்பு வாசனை வந்து சற்று திக்கான பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடவும். ருசியான செட்டிநாடு வெங்காய குழம்பு ரெடி.
- இதனை சாதத்தில் போட்டு பிசைந்து அப்பளம் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











