Latest Updates
-
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க..
நைட் சப்பாத்திக்கு 2 தக்காளி 1 வெங்காயம் வெச்சு இப்படி குருமா செய்யுங்க.. ருசியா இருக்கும்...
Chapati Kurma Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? ஆனால் உங்கள் வீட்டில் காய் எதுவும் இல்லையா? வெறும் வெங்காயம், தக்காளி மட்டும் தான் உள்ளதா?
அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் குருமாவை செய்யுங்கள். இந்த தக்காளி குருமா சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த சப்பாத்தி தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 2
* பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* பட்டை - 1 துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி மற்றும் பொட்டுக்கடலையை எடுத்து,
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு ஆகியவற்றை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து
குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சப்பாத்தி குருமா
தயார்.
Image Courtesy: malathi samayal



Click it and Unblock the Notifications
