Latest Updates
-
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...!
காலிஃப்ளவர் வாங்குனா சில்லி போடாம இந்த மாதிரி ஈஸியா வடை சுடுங்க... மொறுமொறுனு சூப்பரா இருக்கும்...!
Cauliflower Vada Recipe in Tamil: எல்லோருக்கும் பிடித்த காய்கறிகளில் முதலிடத்தில் இருப்பது காலிஃபிளவர்தான். காலிஃபிளவர் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது காலிஃபிளவர் சில்லிதான். ஆனால் அதை வைத்தே பல சுவையான உணவுகளை செய்யலாம். உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? எப்போது காலிஃப்ளவர் வாங்கினாலும், எண்ணெயில் பொரித்தோ அல்லது கிரேவி செய்தோதான் சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை காலிஃப்ளவரை வைத்து இதுபோல வடை செய்து பாருங்கள்.
இப்படி செய்யும் போது, அது மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு அருமையான ஸ்னாக்ஸாக இருக்கும். மேலும் இது மிகவும் சுவையானதாகவும் இருக்கும். சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த காலிஃப்ளவர் வடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இந்த மாதிரி காலிஃப்ளவரை செய்யும் போது, காலிஃப்ளவர் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு காலிஃப்ளவர் வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் வடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 காலிஃப்ளவர்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் உப்பு
- 2 லிட்டர் தண்ணீர்
- 4 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி,பொடியாக நறுக்கியது
- 3 கொத்து கறிவேப்பிலை, பொடியாக நறுக்கியது
- 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி விழுது
- 1 கொத்து புதினா பொடியாக நறுக்கியது
- 1/2 கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டேபிள் ஸ்பூன் கசகசா
- 10 முழு முந்திரி பருப்பு, பொடியாக நறுக்கியது
- தேவையான அளவு உப்பு
- 1/2 கப் கடலை மாவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
- காலிஃபிளவரை தண்ணீரில் கழுவி, சின்ன சின்னதாக பிரித்துக்கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் காலிஃபிளவரைச் சேர்க்கவும். அது பாதி வேகும் வரை 7-8 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி, தண்ணீரை வடிகட்டி விடவும். காலிஃபிளவரை மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காலிஃபிளவர், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள், கசகசா, பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு, உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, புதினா இலைகள், வெங்காயம், சோம்பு மற்றும் கடலை மாவு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- வெங்காயத்தை முடிந்தவரை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். இந்த நிலையில் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
- எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கும் வரை கைகளால் நன்றாகப் பிசையவும். கலவை மிகவும் உலர்ந்திருந்தால், ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்.
- உங்கள் கைகளில் லேசாக எண்ணெய் தடவி, இந்த காலிஃபிளவர் கலவையைக் பருப்பு வடை போல உங்களுக்கு வேண்டிய அளவில் கைகளில் தட்டவும். வடை கெட்டியாகவும், ஓரங்கள் சீராகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- ஒரு தட்டையான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். மிதமான தீயில் காலிஃபிளவர் வடைகளை ஒவ்வொரு பக்கமும் 2-3 நிமிடங்கள் பொரிக்கவும்.
- வடைகளை அடிக்கடி திருப்ப வேண்டாம். அது உடைந்து போகக்கூடும். இருபுறமும் பொன்னிறமானதும், பொரித்த வடைகளை எடுத்து, காகிதத் துண்டுகளில் வைத்து எண்ணெயை வடிக்கவும்.
- அவ்வளவுதான் மொறுமொறுப்பான ஆரோக்கியமான காலிஃபிளவர் வடை ரெடி!



Click it and Unblock the Notifications









