Latest Updates
-
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க..
சப்பாத்தி, பூரிக்கு காலிப்ளவர் வைச்சு இந்த மாதிரி குருமா செய்யுங்க... எவ்வளவு சப்பாத்தி சுட்டாலும் பத்தாது...!
Cauliflower Potato Kurma Recipe in Tamil: தற்போது எடையைக் குறைக்க விரும்புபவர்களின் பிரதான உணவாக இருப்பது சப்பாத்திதான். உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அதற்கு எப்படிப்பட்ட சைடிஷை எப்போதும் செய்வீர்கள்? பெரும்பாலும் சப்பாத்திக்கு செய்யப்படும் பொதுவான சைடிஷ் என்றால் அது உருளைக்கிழங்கு குருமாதான். ஆனால் எவ்வளவு நாள்தான் வெறும் உருளைக்கிழங்கை வைத்தே சப்பாத்தி, பூரிக்கு குருமா வைப்பது. அதுபோன்ற சூழலில் காலிஃப்ளவரை வைத்து குருமா செய்வது சிறந்த தேர்வாக இருக்கும்.
உண்மைதான், உங்கள் வீட்டில் ஒரு காலிஃப்ளவர் இருந்தால் மட்டும் போதும் சப்பாத்திக்கு மிகவும் சூப்பரான ஒரு சைடிஷை செய்யலாம். உங்களுக்கு காலிஃப்ளவர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எளிய ரெசிபியை முயற்சி செய்து வீட்டில் எல்லோரையும் அசத்துங்கள்.

தேவையானப் பொருட்கள்:
- காலிஃப்ளவர் - 1
- உருளைக்கிழங்கு 2
- உப்பு - தேவைக்கேற்ப
மசாலா அரைக்க:
- சின்ன வெங்காயம் - 15
- இஞ்சி பூண்டு விழுது - 1
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- மல்லித் தூள் - 2 ஸ்பூன்
அரைக்க:
- தக்காளி - 3
- முந்திரி - 10
- பால் - 25 மில்லி
- தேங்காய் துருவல் - கால் கப்
தாளிக்க :
- எண்ணெய் - தேவைக்கேற்ப
- பட்டை - 2
- கிராம்பு - 4
- சோம்பு - கால் ஸ்பூன்
- சீரகம் - கால் ஸ்பூன்
செய்முறை :
-அரைக்க கொடுத்த சின்ன வெங்காயம் கலவையை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை தனியாக அரைத்துக் கொள்ளவும். முந்திரியில் தேங்காய் மற்றும் பால் சேர்த்து தனியாக அரைத்துக் கொள்ளவும்.
- காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு உப்பு சேர்த்து அரைவேக்காடு பதத்தில் வேக வைத்து எடுக்கவும். அதேபோல உருளைக்கிழங்கையும் வேக வைத்து எடுக்கவும்.
- வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளித்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த மசாலா கலவையை சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் உப்பு மற்றும் அரைத்த தக்காளி கலவை சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.
- பின்னர் மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்க்கவும். மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அவை நன்கு வதங்கியதும் காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
கிரேவி பச்சை வாசனை போக கொதித்ததும் அரைத்த முந்திரி விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
- சூப்பரான காலிஃப்ளவர் கிரேவி தயார். இது சப்பாத்தி மற்றும் பூரியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications