Latest Updates
-
நவம்பர் 07, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 14 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
சுக்கிரதாதித்ய யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உங்க உதடுகள் கருப்பா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
200 கிராம் பன்னீர் இருந்தா இந்த தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி கிரேவியை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இந்தியாவின் காஸ்ட்லியான தீபாவளி ஸ்வீட் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: மார்ச் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழ்வாங்க.. -
தீபாவளிக்கு இந்த அவல் முறுக்கை செஞ்சு பாருங்க - வாரக்கணக்கில் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
புதன்-சுக்கிரனால் உருவாக்கப்படும் லட்சுமி நாராயண யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..
Carrot Ghee Roast Recipe In Tamil: உங்கள் வீட்டில் கேரட்டை எப்போதும் பொரியல் அல்லது சாம்பார் தான் செய்து சாப்பிடுவீர்களா? அந்த கேரட்டை சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் கேரட் கீ ரோஸ்ட் செய்யுங்கள். இந்த கீ ரோஸ்ட் பன்னீர், காளானை போன்று மிகவும் ருசியாக இருக்கும். இதை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் உங்களுக்கு புதுமையான சைவ ரெசிபிக்களை ட்ரை செய்து சாப்பிட தோன்றினால், இந்த கேரட் கீ ரோஸ்ட்டை ட்ரை செய்து பாருங்கள். நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கேரட் கீ ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் கீ ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கீ ரோஸ்ட் மசாலாவிற்கு...
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 8-10
* முந்திரி - 8-10
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு..
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 3 (தோல் நீக்கி வட்டத் துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த மசாலா
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சோம்பு,
சீரகம், மிளகு, வெந்தயம், கடுகு, வரமிளகாய், முந்திரி ஆகியவற்றை
சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் இஞ்சி
பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், கேரட் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் ப்ரை செய்து,
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப
உப்பு தூவி நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ப்ரை செய்து வைத்துள்ள கேரட் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், கேரட் கீ ரோஸ்ட்
தயார்.



Click it and Unblock the Notifications
