Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
1 குடைமிளகாய் இருந்தா.. மதியம் டக்குன்னு இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Capsicum Pulao Recipe In Tamil: கோடைக்காலம் என்பதால் நீண்ட நேரம் சமையலறையில் விதவிதமாக சமைத்து சாப்பிட பிடிக்காது. எவ்வளவு சீக்கிரம் சமையலை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சிம்பிளாக சமையலை முடித்துவிட்டு வருவோம். அதில் பெரும்பாலானோர் தயிரைக் கொண்டு மோர் குழம்பை அடிக்கடி செய்து சமையலை முடிப்பார்கள்.

ஆனால் சிம்பிளாக, அதே சமயம் ருசியான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு குடைமிளகாய் புலாவ் செய்யுங்கள். இந்த புலாவ் செய்தால், தயிர் பச்சடியை சைடு டிஷ்ஷாக வைத்துக் கொண்டால் போதும். முக்கியமாக இந்த புலாவ் குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
இந்த குடைமிளகாய் புலாவ் ரெசிபி குறித்து ஈரோடு அம்மாச்சி சமையல் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த குடைமிளகாய் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் புவாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பச்சை மிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 4
* முந்திரி - 6
புலாவ் தாளிப்பதற்கு..
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* முந்திரி - 5
* பட்டை - 1
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - சிறிய துண்டு
* ஏலக்காய் - 1
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* பெரிய குடைமிளகாய் - 1 (விதைகளை நீக்கி பெரிய
துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
* அரைத்த விழுது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 சிட்டிகை
* எலுமிச்சை - பாதி
* பாசுமதி அரிசி - 1 டம்ளர் (நீரில் 20 நிமிடம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும்
முந்திரியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
பிரியாணி இலை, முந்திரி, பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, ஏலக்காய்,
சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் புதினா மற்றும்
கொத்தமல்லியையும் சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துண்டுகளாக்கப்பட்ட குடைமிளகாயை சேர்த்து, 1 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த விழுதை சேர்த்து, சிறிது நீரை தெளித்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள்
சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் 20 நிமிடம் ஊற வைத்து கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து
கிளறி, 1 டம்ளர் அரிசிக்கு 1 1/2 டம்ளர் நீர் என்ற கணக்கில் நீரை
ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு, மிதமான
தீயில் வைத்து 3 நிமிடம் வேக வைத்து இறக்கினா, சுவையான குடைமிளகாய்
புலாவ் தயார்.



Click it and Unblock the Notifications
