Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
சுவையான... முட்டைக்கோஸ் சட்னி
உங்களுக்கு தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சட்னியை செய்து சாப்பிடுங்கள். அது தான் முட்டைக்கோஸ் சட்னி. இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம்.
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை ஏதாவது செய்ய நினைக்கிறீர்களா? இட்லி, தோசைக்கு சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும். அதுவும் உங்களுக்கு தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சட்னியை செய்து சாப்பிடுங்கள். அது தான் முட்டைக்கோஸ் சட்னி. இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
* முட்டைக்கோஸ் - 2 1/2 கப் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1-3
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
பிற பொருட்கள்...
* புளி - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - அரைப்பதற்கு தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1-2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வரமிளகாய் - 1-2 (விதைகளை நீக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் முட்டைக்கோஸை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* முட்டைக்கோஸ் பாதியாக அல்லது அரை வேக்காடாக வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, 1 டீஸ்பூன் புளி சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அரைத்த சட்னியை ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1-2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், முட்டைக்கோஸ் சட்னி தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications












