Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. வயிறு மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பு வேகமா குறையும்...
Weight Loss Brown Rice Kanji Recipe In Tamil: உங்கள் உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கி உள்ளதா? அந்த கொழுப்புக்களை கரைக்க தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, டயட்டிலும் உள்ளீர்களா? உடம்பில் உள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க வேண்டுமானால், தினமும் காலையில் நார்ச்சத்து அதிகம் நிறைந்த கைக்குத்தல் அரிசி மற்றும் பச்சை பயறு கொண்டு கஞ்சி தயாரித்து குடியுங்கள். இந்த கஞ்சி சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக இந்த கஞ்சியை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

உங்களுக்கு உடல் கொழுப்பைக் கரைக்கும் கைக்குத்தல் அரிசி பச்சை பயறு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கைக்குத்தல் அரிசி பச்சை பயறு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து வைத்து எப்படி இருந்தது என்ற எங்களுடந் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கைப்பிடி அல்லது 1/2 கப்
* கைக்குத்தல் அரிசி - 1 கைப்பிடி அல்லது 1/2 கப்
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 5 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - சிறிது
துவையலுக்கு..
* பச்சை மிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* புதினா - 1 கைப்பிடி
* இஞ்சி - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 5
* பூண்டு - 3 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் 1/2 கப் பச்சை பயறு மற்றும் 1/2 கப்
கைக்குத்தல் அரிசியை எடுத்து, நீரில் 2 முறை கழுவி விட்டு, பின் அதில்
5 கப் நீரை ஊற்றி, குறைந்தது 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு பற்கள் மற்றும் இஞ்சியை தட்டிப் போட்டு, நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/4 டீஸ்பூன் மிளகை தட்டி சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள பச்சை பயறு மற்றும் கைக்குத்தல் அரிசியை
சேர்த்து கிளறி, அரிசி ஊற வைத்த நீரை அப்படியே மொத்தமாக ஊற்ற
வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி, உயர்
தீயில் 2 விசில் விட்டு, பின் மிதமான தீயில் 2 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் நன்கு மசித்து விட்டு
கிளறி விட்டு, துருவிய தேங்காயை சேர்த்து மீண்டும் கிளறினால், சுவையான
கைக்குத்தல் அரிசி பச்சை பயறு கஞ்சி தயார்.
* கஞ்சி தயாரித்த பின், அதற்கு சைடு டிஷ்ஷாக மிக்சர் ஜாரில், பச்சை
மிளகாய், துருவிய தேங்காய், புளி, புதினா, இஞ்சி, சின்ன வெங்காயம்,
பூண்டு பற்கள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு கப் கஞ்சியுடன் இந்த துவையலை சேர்த்து சாப்பிட்டால்,
சுவையான கைக்குத்தல் அரிசி பச்சை பயறு கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications






