Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ்... பிரட் வெஜிடேபிள் கட்லெட்
உங்கள் வீட்டில் இருப்போர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் பிரட் மற்றும் காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு சுவையான பிரட் வெஜிடேபிள் கட்லெட் செய்து கொடுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் நல்ல சுவையான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க சொல்கிறார்களா? என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் பிரட் மற்றும் காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு சுவையான பிரட் வெஜிடேபிள் கட்லெட் செய்து கொடுங்கள். இந்த கட்லெட் செய்வது மிகவும் ஈஸி. முக்கியமாக இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பிரட் வெஜிடேபிள் கட்லெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் வெஜிடேபிள் கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 7 துண்டுகள்
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கேரட் - 1 (துருவியது)
* பீன்ஸ் - 3 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் காய்கறிகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி, காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் வெந்ததும், அதில் மசாலா பொடிகளை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.
* அடுத்து பிரட் துண்டுகளை எடுத்து, நீரில் நனைத்து, பிழிந்துவிட்டு, பின் அந்த பிரட்டை ஒரு பௌலில் உலர்த்திக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
* பின்பு அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பிரட் வெஜிடேபிள் கட்லெட் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications








