Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
பாம்பே ரோட்டுக்கடை சட்னி ரெசிபி... இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...!
Bombay Rottu Kadai Chutney Recipe in Tamil: சாலையோர தள்ளுவண்டிக் கடைகள் என்பது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கக்கூடியவை. தமிழ்நாட்டின் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் உணவுகள் மிகவும் புகழ் பெற்றவை. அதேபோல இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் சில பிரபலமான சாலையோர உணவுகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் பாம்பே சட்னி. மும்பையின் அனைத்து சாலையோரக் கடைகளிலும் இந்த சட்னியை நீங்கள் பார்க்கலாம்.
இந்த கடலை மாவு சட்னி தமிழ்நாட்டில் பாம்பே சட்னி என்று அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிர உணவான பிட்லாவை ஒத்திருப்பதால் இதற்கு பாம்பே சட்னி என்ற பெயர் வந்திருக்கலாம். இது பொதுவாக இட்லி மற்றும் தோசையுடன் பரிமாறப்படுகிறது. சில இடங்களில், வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து இறுதியில் சேர்க்கப்பட்டு அதை சப்பாத்தி, பூரிக்கும் சைடிஷாக வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை செய்வீர்களா? அந்த இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னியை தான் சைடிஷ்ஷாக செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சட்னியைத் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை இந்த பாம்பே ஸ்டைல் ரோட்டுக்கடை தண்ணி சட்னியை செய்யுங்கள்.
உங்களுக்கு பாம்பே ஸ்டைல் ரோட்டுக்கடை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாம்பே ஸ்டைல் ரோட்டுக்கடை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் சோம்பு
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி
- 2 நறுக்கிய பச்சை மிளகாய்
- 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
- 1/2 கப் நறுக்கிய தக்காளி
- 1/2 டீஸ்பூன் சர்க்கரை
- 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
- 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 கப் தண்ணீர்
- 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி
- 2 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- 1/2 எலுமிச்சை சாறு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் சீரகம், சோம்பு, உடைத்த வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் துருவிய இஞ்சி மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பச்சை மிளகாய் வதங்கியதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி, உப்பு மற்றும் சிறிது சர்க்கரை, பெருங்காயம், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
- கடாயை ஒரு மூடியால் மூடி, தக்காளி மென்மையாகும் வரை சமைக்கவும். எல்லாவற்றையும் ஒரு கரண்டியை வைத்து தக்காளி கரையும் வரை முழுவதுமாக மசிக்க வேண்டும்.
- ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதித்தவுடன் அதில் 2 ஸ்பூன் கடலை மாவை போட்டு கொதிக்க விடவும்.
- கடலை மாவு நன்கு கொதித்ததும் அதை எடுத்து குழம்பில் ஊற்றி கடாயை மூடி போட்டு கொதிக்க விடவும். 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
- இறுதியாக கொத்தமல்லி தழை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான பாம்பே ஸ்டைல் ரோட்டுக்கடை சட்னி ரெடி. இதை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications











