Latest Updates
-
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்..
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற.. பாகற்காய் தால்
பாகற்காயின் கசப்புத்தன்மை தெரியாதவாறு சமைத்து சாப்பிட்டால், குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் பாகற்காயைக் கொண்டு தால் செய்தால், அது சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும்.
காய்கறிகளில் பாகற்காய் மிகவும் கசப்புத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அது உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக இந்த காய் சர்க்கரை நோயாளிகளுக்கு, குடல் புழுக்களைக் கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. பாகற்காயின் கசப்புத்தன்மையால் நிறைய பேர் இதை உணவில் அதிகம் சேர்க்கமாட்டார்கள். ஆனால் பாகற்காயின் கசப்புத்தன்மை தெரியாதவாறு சமைத்து சாப்பிட்டால், குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் பாகற்காயைக் கொண்டு தால் செய்தால், அது சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பாகற்காய் தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாகற்காய் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பெரிய பாகற்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
* துவரம் பருப்பு - 1/2 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் பாகற்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி இறக்க வேண்டும்.
* பின் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அதில் வதக்கி வைத்துள்ள பாகற்காய் மற்றும் வெங்காபயத்தைப் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு, பின் மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, பருப்பையும், காயையும் லேசாக மசித்து விட வேண்டும்.
* பின்பு குக்கரில் உள்ளதை ஒரு வாணலியில் ஊற்றி, அடுப்பில் வைத்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, புளிச்சாறு, வெல்லம், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதுவும் மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் கெதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தாலுடன் சேர்த்து கிளறினால், சுவையான பாகற்காய் தால் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications