Just In
- 2 hrs ago
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- 2 hrs ago
புதினா சட்னி
- 3 hrs ago
திருமணமான ஆண்கள் தினமும் 'இத' ஒரு கையளவு சாப்பிடுவது ரொம்ப நல்லதாம்... இது ஆண்களின் பல பிரச்சனையை போக்குமாம்..
- 3 hrs ago
இரவு உணவை எத்தனை மணிக்குள் சாப்பிட வேண்டும்? விரைவாக சாப்பிடுவது உண்மையில் நல்லதா?
Don't Miss
- News
ஆளுங்கட்சி பிரமுகரின் காரில் சடலம்.. "அடிச்சு கொன்றது இவர்தான்" உறவினர்கள் புகாரால் அதிர்ச்சி!
- Finance
புதிய சாதனை படைத்த இந்தியா.. ஆனா இப்போ நிலைமை வேற..!
- Movies
விஜய் பழைய மாதிரி இல்ல.. வேற லெவலில் மாறிட்டார்.. இயக்குனர் பேரரசு!
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Sports
"ஓய்வு நியாயமாக இருக்காது".. சிஎஸ்கேவின் கடைசிப்போட்டி.. கேப்டன் தோனி கூறிய முக்கிய கருத்து!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Besan Chutney Recipe : கடலை மாவு சட்னி
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யும் ஐடியாவில் உள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் இன்று நாம் விரைவில், அதே சமயம் வீட்டில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய ஒரு சுவையான சட்னி பற்றி பார்க்கப் போகிறோம். அது தான் கடலை மாவு சட்னி. இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு கடலை மாவு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலை மாவு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கடலை மாவை சேர்த்த 2 நிமிடம் குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.
* அடுத்து நீர் ஊற்றி நன்கு கிளறி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக சுவைக்கேற்ப உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கடலை மாவு சட்னி தயார்.
Image Courtesy: yummytummyaarthi