Latest Updates
-
இந்த 6 உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா சிறுநீரக கற்கள் வந்துவிடும்.. -
2027-ல் ராகு-கேதுவால் கஷ்டங்கள் தீர்ந்து, செழிப்பான வாழ்க்கையை வாழப்போகும் 6 ராசிக்காரங்க இவங்க தான்! -
உலகம் முழுக்க பிறந்த நாளுக்கு ஏன் கேக் வெட்டி மெழுகுவர்த்தியை ஊதுகிறார்கள்? அதன் வரலாறு என்ன தெரியுமா? -
1 முள்ளங்கியும், அரிசி மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது! -
நவம்பர் 27, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
நவம்பர் இறுதியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
முட்டையை எப்பவும் ஒரே மாதிரி மசாலா செய்யாம.. ஒருடைம் இப்படி கீமா மசாலா செய்யுங்க.. -
தலைமுடி வறண்டும், அதிக சிக்கலுடனும் இருக்கா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் 1 முறை போடுங்க.. -
12 ராசிக்காரர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் ஸ்டைல் எப்படி இருக்கும்? உங்க ராசிப்படி நீங்க எப்படின்னு பாருங்க.. -
எலுமிச்சை தோலை இனி குப்பையில் போடாதீங்க... இந்த 5 விஷயங்களுக்கு பயன்படுத்துங்க!
பெங்காலி ஸ்டைல் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
Bengali Pulao Recipe in Tamil: மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் வீட்டில் உள்ளவர்களின் பாராட்டைப் பெறும் வகையில் சுவையான ஒரு உணவை சமைக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், பட்டாணியும், கொஞ்சம் உலர் பழங்களும்உள்ளதா? அப்படியானால் அதை வைத்து வீடே மணக்கும் படி வித்தியாசமான பெங்காலி ஸ்டைல் புலாவை செய்து பாருங்கள்.

இந்த பெங்காலி புலாவ் ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான புலாவ் சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு உணவை செய்து கொடுக்க விரும்பினால் இந்த புலாவை செய்து கொடுங்கள். ஏனெனில் இதில் சேர்க்கப்படும் பொருட்களும், உலர் பழங்களும் மிகவும் ஆரோக்கியமானவை. அதோடு இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும் என்பதால் பேச்சுலர்களும் இதை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்களுக்கு பெங்காலி ஸ்டைல் புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்காலி புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3/4 கப் பாஸ்மதி அரிசி
- 1/2 கப் பட்டாணி
- 1/4 கப் முந்திரி
- 3 டீஸ்பூன் உலர் திராட்சை
- 2 டீஸ்பூன் சர்க்கரை
- 4 கிராம்பு
- 4 பச்சை ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- 1/2 இன்ச் இலவங்கப்பட்டை
- 10 மிளகு
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- சிறிதளவு குங்குமப்பூ
- 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர்
- 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
- தேவையான அளவு உப்பு
- 2 பச்சை மிளகாய்
- 3 ஸ்பூன் நெய்
- 6 நறுக்கிய பாதாம்
செய்முறை:
- முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாகக் கழுவி, போதுமான அளவு தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றிச் சூடாக்கி, அதில் முந்திரி, நறுக்கிய பாதாம் மற்றும் முழு மசாலாப் பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் கீறிய பச்சை மிளகாய், பட்டாணி மற்றும் திராட்சையைச் சேர்த்து நன்கு கிளறவும்.
- ஊறவைத்த அரிசியிலுள்ள தண்ணீரை வடித்துவிட்டு, அதை அந்தப் பாத்திரத்தில் சேர்க்கவும்.
- அதன்பின் உப்பு, சர்க்கரை, குங்குமப்பூ, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும்.
- 1.5 கப் தண்ணீர் ஊற்றி, அது கொதிக்கத் தொடங்கும் வரை காத்திருக்கவும்.
- பாத்திரத்தை மூடியால் மூடி, அரிசி வேகும் வரை மற்றும் தண்ணீர் முழுவதுமாக வற்றும் வரை குறைந்த தீயில் வேகவைக்கவும்.
- இதன் மேல் சிறிது ரோஸ் வாட்டர் தெளித்து, அரிசி உடையாதவாறு மெதுவாகக் கிளறிவிடவும்.
- மீண்டும் மூடி வைத்து, பரிமாறுவதற்கு முன் 10 நிமிடங்கள் அப்படியே விடவும்.
- இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் திராட்சை கொண்டு அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
