வாழைப்பழமும், ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணிப் பாருங்க..

Posted By:

Banana Rava Balls Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் இனிப்பாக சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் வாழைப்பழமும், ரவையும் உள்ளதா?

அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்கள். அது தான் வாழைப்பழ ரவா உருண்டை. இந்த உருண்டை செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

Banana Rava Balls How To Make a Banana Rava Balls Recipe

உங்களுக்கு வாழைப்பழ ரவா உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ ரவா உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நெய் - 2 டீஸ்பூன்
* முந்திரி, பாதாம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* ரவை - 1 கப்
* நெய் - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பழுத்த வாழைப்பழம் - 2
* சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, பாதாமை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ரவையை சேர்த்து பொன்னிறமாக நல்ல மணம் வரும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காய் சேர்த்து நன்கு நீர் வற்றும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 2 வாழைப்பழத்தை சேர்த்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வறுத்த ரவை, தேங்காய் மற்றும் முந்திரி, பாதாமை சேர்த்து, அத்துடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து குறைவான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வாழைப்பழ ரவா உருண்டை தயார்.

Image Courtesy: Akshaya. com

[ of 5 - Users]
Story first published: Thursday, May 30, 2024, 16:38 [IST]
Desktop Bottom Promotion