Latest Updates
-
மாதவிடாய் காலத்தில் உங்கள் மனைவி கஷ்டப்படுகிறாரா? இந்த 4 விஷயங்களைச் செய்தால் நீங்களே சிறந்த கணவர்! -
கொத்தவரங்காய் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்... -
டின்சக் பூஜா திருமணத்தில் கணவர் முகத்தை மறைத்தது ஏன்? இணையத்தில் வைரலாகும் 'சாஃப்ட்-லாஞ்சிங்' ரகசியம் இதுதான்! -
தலைமுடி அடர்த்தியா வேகமா வளரணுமா? அப்ப கற்றாழை எண்ணெயை இப்படி தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
ஆண்டின் இறுதியில் நடக்கும் ராகு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படப்போகுது! -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதும்… பணமும் அதிர்ஷ்டமும் தானாக தேடி வரும்! -
பிரியாணியோடு இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! எதுக்கு-ன்னு பாருங்க.. -
வீட்டில் மணி பிளாண்ட் வச்சிருக்கீங்களா? அதிக மாசத்தில் இந்த வாஸ்து மாற்றங்களை செஞ்சா பணம் தானா வரும்! -
12 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படபோகுது! -
கம்பு தோசையும், தேங்காய், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் க்ரீன் மசாலா - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் நாக்குலயே நிக்கும்..
Bakrid Special Mutton Green Masala Recipe In Tamil: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வீட்டில் மட்டன் பிரியாணி மட்டுமின்றி, அதற்கு சைடு டிஷ்ஷாக வேறு பல சுவையான மட்டன் ரெசிபிக்களையும் செய்து வைப்பார்கள். அப்போது உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சற்று வித்தியாசமான, அதே சமயம் ருசியான ஒரு மட்டன் ரெசிபியை செய்து கொடுக்க நினைத்தால், மட்டன் கிரீன் மசாலாவை செய்யுங்கள்.

இந்த மட்டன் மசாலா சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த மட்டன் மசாலா சட்டென்று செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த ரெசிபிக்கு ஸ்பெஷலாக ஒரு மசாலா மட்டும் அரைத்தால் போதும், பின் சட்டென்று தயாராகிவிடும். முக்கியமாக இந்த ரெசிபியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்கும் போது, வீட்டில் உள்ளோரின் பாராட்டுக்களைப் பெறலாம்.
இந்த மட்டன் க்ரீன் மசாலா ரெசிபி குறித்து ஷில்பா சமையல் என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த மட்டன் க்ரீன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் க்ரீன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 8
* பூண்டு - 1 கைப்பிடி
* இஞ்சி - 1 துண்டு
* சீரகம் - 1 1/2 ஸ்பூன்
* மிளகு - 1 1/2 ஸ்பூன்
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மட்டன் - 1 கிலோ
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த விழுது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கைப்பிடி புதினா, 1 கைப்பிடி கொத்தமல்லியை
சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், மட்டனை சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி விட்டு, குக்கரை
மூடி 10 விசில் விட்டு இறக்கினால், சுவையான மட்டன் க்ரீன் மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications