Latest Updates
-
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம்
பக்ரீத் ஸ்பெஷல் மதுரை மட்டன் எண்ணெய் சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Bakrid Special Madurai Mutton Ennai Chukka Recipe In Tamil: பக்ரீத் பண்டிகை வரப்போகிறது. இந்த பண்டிகை என்றாலே அனைவருக்கும் மட்டன் பிரியாணி தான் நினைவிற்கு வரும். இந்நாளில் இஸ்லாமிய வீடுகளில் மட்டன் பிரியாணி சமைப்பதோடு, அதற்கு சைடு டிஷ்ஷாக வேறு பல ரெசிபிக்களையும் செய்வார்கள். இந்த பக்ரீத் பண்டிகை மெனுவில் நீங்கள் ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

அப்படியானால் மதுரை மட்டன் எண்ணெய் சுக்கா ரெசிபியை செய்யுங்கள். இந்த மட்டன் சுக்கா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக இது அனைவரது பாராட்டையும் பெறும் வகையில் ருசியாகவும் இருக்கும்.
இந்த மதுரை மட்டன் எண்ணெய் சுக்கா ரெசிபி குறித்து ஷில்பா சமையல் என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த மதுரை மட்டன் எண்ணெய் சுக்கா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை மட்டன் எண்ணெய் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடிப்பதற்கு...
* சீரகம் - 1 ஸ்பூன்
* மிளகு - 1 ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
* மட்டன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த பொடி
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம் மற்றும்
மிளகு சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடி செய்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பிளெண்டரில் சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் மட்டனை கழுவி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி
விட்டு, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 30 நிமிடம் மட்டனை வேக
வைக்க வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் கறிவேப்பிலை மற்றும்
வரமிளகாயை உடைத்து சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைத்து
இறக்கினால், சுவையான மதுரை மட்டன் எண்ணெய் சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications
