Latest Updates
-
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பாதுஷா கச்சிதமா வீட்டிலேயே செய்வது எப்படி? இதை ட்ரை பண்ணிப் பாருங்க!!- பொங்கல் ஸ்பெஷல்
பாதுஷா புகழ்பெற்ற இந்திய இனிப்பு வகையாகும். இது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகையின் போது செய்யப்படும் ஒரு விருப்பமான ரெசிபி ஆகும். இதை எப்படி செய்வது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

மைதா மாவு, தயிர், பேக்கிங் சோடா மற்றும் நெய் போன்றவற்றை கொண்டு செய்யும் பாதுஷா விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகையின் போது செய்யப்படும் ஒரு விருப்பமான ரெசிபி ஆகும். வட இந்தியாவில் இது பலுசாஹி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த பாதுஷாவை அப்படியே சர்க்கரை பாகுவில் ஊற வைத்து சாப்பிடும் போது அதன் உருகும் தன்மையும் தித்திக்கும் இனிப்பு சுவையும் உங்கள் நாக்கை சொட்டை போடச் செய்து விடும்.
சரியான பதத்தில் மாவை பிசைந்து விட்டால் போதும் நல்ல மென்மையான புஷ் புஷ் என்ற பாதுஷாவை வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம்.
சரி வாங்க இந்த சுவையான பாதுஷா ரெசிபியை இங்கே காணலாம்.

Recipe By: காவ்யா ஸ்ரீ
Recipe Type: ஸ்வீட்ஸ்
Serves: 8 துண்டுகள்
-
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
மைதா - 1 கப்
சர்க்கரை - 11/4 கப்
தண்ணீர் - 1/4 கப்
கொத்தமல்லி பொடி - 1/4 டேபிள் ஸ்பூன்
-
ஒரு பெளலில் நெய்யை எடுத்து கொள்ளவும்
தயிரை அதனுடன் சேர்க்கவும்
அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும்
நன்றாக கலக்கவும்
அதனுடன் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்
கைகளில் ஒட்டாத வண்ணம் மிதமான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்
கொஞ்சம் மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும்
பல் குத்தும் குச்சியை கொண்டு நடுவில் லேசாக அழுத்தி விடவும்
பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும். அவைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்
குறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.
ஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும்
பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு ஆற வைக்கவும்
அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும்
உடனே தண்ணீர் ஊற்றவும்
சர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்
பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்
இப்பொழுது பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்து சர்க்கரை பாகுவில் ஊற வைக்க வேண்டும்
10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
பிறகு ஊற வைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும்
சர்க்கரை பாகு நன்றாக உறைந்ததும் பாதுஷாவை பறிமாறவும்.
- மாவின் பதம் மிகவும் முக்கியம். எனவே சரியான அளவு பொருட்களை கலந்து சரியான பதத்தில் பிசைய வேண்டும்.
- மாவின் பதம் ரெம்ப மென்மையாக இருந்தால் அதனுடன் இன்னும் கொஞ்சம் மைதாவை சேர்த்து கொள்ளவும். ரெம்ப கெட்டியான பதமாக இருந்தால் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
- அதிகமான அல்லது மிதமான தீயில் பாதுஷாவை பொரித்தால் சீக்கிரம் பொன்னிறமாக மாறி உள்ளே வேகாமல் இருக்கும். எனவே குறைந்த தீயில் பொரிப்பது முக்கியம்.
- பரிமாறும் அளவு - 1 பாதுஷா
- கலோரிகள் - 178 கலோரிகள்
- கொழுப்பு - 5 கிராம்
- புரோட்டீன் - 2 கிராம்
- கார்போஹைட்ரேட் - 38 கிராம்
- சர்க்கரை - 25 கிராம்
ஒரு பெளலில் நெய்யை எடுத்து கொள்ளவும்
தயிரை அதனுடன் சேர்க்கவும்
அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும்
நன்றாக கலக்கவும்
அதனுடன் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்
கைகளில் ஒட்டாத வண்ணம் மிதமான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்
கொஞ்சம் மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும்
பல் குத்தும் குச்சியை கொண்டு நடுவில் லேசாக அழுத்தி விடவும்
பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும். அவைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்
குறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.
ஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும்
பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு ஆற வைக்கவும்
அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும்
உடனே தண்ணீர் ஊற்றவும்
சர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்
பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்
இப்பொழுது பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்து சர்க்கரை பாகுவில் ஊற வைக்க வேண்டும்
10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
பிறகு ஊற வைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும்
சர்க்கரை பாகு நன்றாக உறைந்ததும் பாதுஷாவை பறிமாறவும்.

Click it and Unblock the Notifications