சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது...

Venus Transit In Gemini On 14 May 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

Venus Transit In Gemini On 14 May 2026 These Zodiac Signs Get More Money Benefits

அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். அந்த வகையில் தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் உள்ளார். இந்நிலையில் மே 14 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன்.

இந்த மிதுன ராசியில் புதன் ஜூன் 08 ஆம் தேதி வரை இருப்பார். இந்த மிதுன ராசிக்கு சுக்கிரன் செல்வதால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு கூட்டு தொழிலை செய்வதற்கான வாய்ப்புக்கள் உருவாகலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். நல்ல செய்திகளைப் பெறக்கூடும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகள் விரைவில் முடிவடையும். பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பொருள் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் தேடி வரும். செய்யும் வேலையில் மனநிறைவு கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, May 10, 2026, 23:49 [IST]
Desktop Bottom Promotion