சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?

Venus Transit In Pooradam Nakshatra On 8 May 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 1 மாதம் வரை இருப்பார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

Venus Transit In Pooradam Nakshatra On 8 May 2026 These Zodiac Signs Should Be Careful

இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளில் அதிபதி மற்றும் இவர் அழகு, ஆடம்பரம், காதல் செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் இதுவரை மூல நட்சத்திரத்தில் பயணித்து வந்தார். இந்நிலையின் மே 08 ஆம் தேதி சுக்கிரன் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார்.

அதுவும் பூராடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் தான். இப்படி சொந்த நட்சத்திரத்திற்கே சுக்கிரன் செல்வது சிறப்பானதாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு கடினமாக இருக்கலாம். இப்போது சுக்கிரன் தனது சொந்த நட்சத்திரம் செல்வதால் எந்த ராசிக்கு மோசமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

பூராடம் நட்சத்திரம்

ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அதில் 20 ஆவது நட்சத்திரம் தான் பூராடம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் ஆவார். இந்த நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் செல்வதால், பல ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு சிரமமாக இருக்கும்.

கன்னி

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் பண விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இன்று முதல் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது நல்லது. இப்படி பணப் பற்றாக்குறை ஏற்படுவதால், அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். அதுவும் பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் செல்லும் ஒவ்வொரு வேலையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியம் பலவீனமாகும். பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள் குறிப்பாக இந்த பேச்சால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்தால், அதை தள்ளிப் போடுவது நல்லது.

மகரம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் தங்கள் வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். உங்களின் திட்டங்கள் ஒவ்வொன்றிலும் தடைகளை சந்திக்க நேரிடும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்து ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. அதோடு, எந்த ஒரு ஆவணங்களிலும் கையெழுத்திடும் போதும் கவனமாக இருக்க அறிவுத்தப்படுகிறது.

பரிகாரங்கள்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 ராசிக்காரர்களும் வெள்ளிக்கிழமைகளில் பால், தயிர் அல்லது வெள்ளை நிறபொருட்களை வாங்கி, தானமாக கொடுங்கள். அது மட்டுமின்றி, சுக்கிரனின் மந்திரமான ' ஓம் ஷும் சுக்ராய நமஹ' என்பதை 108 முறை தவறாமல் உச்சரிக்கவும்

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, May 8, 2026, 14:59 [IST]
Desktop Bottom Promotion