Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
Chow Chow Chutney Recipe in Tamil: காலையில் இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? இட்லி, தோசைக்கு சற்று வித்தியாசமான அதேசமயம் சுவையான சட்னியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் பலருக்கும் பிடிக்காத சௌ சௌ காய்கறியை வைத்து சட்னியை அரைத்து பாருங்கள். இதுவரை நீங்கள் இந்த காய்கறியை பொரியல், சாம்பார் போன்ற வடிவில் தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இது போல சட்னி அரைத்துக் கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த சௌ சௌ சட்னியை செய்வது மிகவும் சுலபம். வெறும் 15 நிமிடத்திலேயே செய்துவிடலாம். இந்த சட்னியானது இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இதை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். இந்த சட்னி அனைத்து உணவுகளுக்கும் பக்காவான காம்போவாக இருக்கும்.
உங்களுக்கு சௌ சௌ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 சௌ சௌ
- 4 பச்சை மிளகாய்
- 1ஸ்பூன் புளி (அழுத்தி அளந்தது)
- 5 சின்ன வெங்காயம்
- 5 பூண்டுப் பல்
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை:
- சௌ சௌ-ன் தோலை நீக்கி, தோராயமாக நறுக்கிக்கொள்ளவும். தேவையான பொருட்களையும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, அதில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சௌ சௌ ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இதை 3 நிமிடங்களுக்கு வதக்கவும். அதன்பின் புளி, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து மேலும் 2 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் இவற்றை ஒரு தட்டுக்கு மாற்றி ஆற விடவும்.
- இவை ஆறியதும் ஒரு மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- முதலில் புளி மற்றும் மிளகாயை அரைத்துவிட்டு, பின்னர் மீதமுள்ள பொருட்களையும் சேர்த்து அரைத்தால் நன்றாக அரைபடும்.
- பின்னர் அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பின்னர் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும், பருப்பு நிறம் மாறியதும் இதை சட்னி மீது கொட்டி கிளறினால் சுவையான சௌ சௌ சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications