Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் நேரத்துல இந்த இனிப்பை செய்யுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
Aval Kesari Recipe in Tamil: வீட்டில் செய்யப்படும் இனிப்புகள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது கேசரிதான். ஆரஞ்சு நிறத்தில், நெய் மிதக்கும் கேசரி என்றால் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கேசரி தமிழர்களின் விருந்தில் மட்டுமல்ல கலாச்சாரத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
வீட்டில் விஷேசம், பண்டிகை, பிறந்த நாட்கள், என எது வந்தாலும் நாம் முதலில் செய்யும் ஒரு இனிப்பு ரவா கேசரிதான். கல்யாண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் இனிப்பான கேசரியை வெறும் 3 அல்லது 4 பொருட்களை கொண்டே வெகு சுலபமாக இதை செய்து விடலாம். பொதுவாக கேசரியை நாம் ரவையை வைத்துதான் செய்வோம். ஆனால் அவலை வைத்தும் கேசரி செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அவல் வைத்து செய்யப்படும் இந்த கேசரி அல்வா போல வாயில் வைத்தவுடனேயே கரைவது போல இருக்கும். மேலும் அவலை வைத்து செய்யப்படுவதால் இது கூடுதல் ஆரோக்கியமானதும் கூட. ரவா கேசரி சாப்பிட்டு உங்கள் போரடித்திருந்தால் இந்த அவல் கேசரியை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.
உங்களுக்கு சுவையான அவல் கேசரியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் கேசரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் அவல்
- 1 கப் சர்க்கரை
- 2 கப் தண்ணீர்
- ¼ ஸ்பூன் ஏலக்காய் தூள்
- 10 முந்திரிப் பருப்புகள்
- 10 உலர் திராட்சைகள்
- 2 சிட்டிகை கேசரி பவுடர்
- 6 ஸ்பூன் நெய்
செய்முறை:
- ஒரு கடாயைச் சூடாக்கி, அதில் அவலைப் போட்டு, சில நிமிடங்களுக்கு எண்ணெய் ஏதும் சேர்க்காமல் வறுக்கவும். கருகாமல் இருக்க அடிக்கடி கிளறவும்.
- நிறம் மாறியதும் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த கேசரி கொரகொரப்பாக இருந்தால்தான் நன்றாக இருக்கும்.
- ஒரு கடாயைச் சூடாக்கி, அதில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து, அதில் உடைத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையைச் சேர்த்து நெய்யில் வதக்கவும்.
- முந்திரியை கருகாமல் வறுத்து ஒரு தட்டில் தனியாக எடுத்து வைக்கவும்.
- இப்போது பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, அதை நன்கு கொதிக்கவிடவும்.
- தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், வறுத்த அவல் பொடியைச் சேர்த்து, கட்டிகள் விழாமல் இருக்க தொடர்நது கலக்கவும்.
- அவல் முழுமையாக வெந்து, நீர் முழுவதும் உறிஞ்சப்பட்டதும், பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- சர்க்கரை சேர்ப்பதால் கலவை சற்று நீர்த்துப்போகும், எனவே தொடர்ந்து கிளறிக்கொண்டே இருங்கள்.
- பின்னர் கேசரி பவுடரை சேர்த்து நன்றாக கிளறவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து கலவை முழுவதையும் நன்றாகக் கிளறவும். இந்த நிலையில் நெய்யைச் சேர்த்து, நன்கு கலக்கவும்.
- கேசரி பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல், சுருண்டு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் ஏலக்காய் தூளைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சைகளைச் சேர்த்து, நன்றாகக் கலந்த பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.
- அவ்வளவுதான் அல்வா மாதிரியான அவல் கேசரி ரெடி!



Click it and Unblock the Notifications