ஆட்டுக்காலை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க..இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும்!

Posted By:

Attukal Kulambu Recipe in Tamil: தற்போது காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இப்படியான சூழ்நிலையில் பலரும் பலவிதமான நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் நோய்த்தொற்றுகளின் அபாயத்தில் இருந்து விடுபட, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்படியான சூப்புகளை தயாரித்து குடித்து வருவது நல்லது. சூப் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆட்டுக்கால் சூப்தான். ஏனெனில் அது அவ்வளவு சுவையானது மற்றும் ஆரோக்கியமானது.

வழக்கமாக ஆட்டுக்கால் சூப்பை ஒரே மாதிரிதான் செய்திருப்பீர்கள். செட்டிநாடு உணவுகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. செட்டிநாடு ஸ்டைலில் ஆட்டுக்காலை குழம்பு வைத்து நீங்கள் எப்போதாவது முயற்சித்துப் பார்த்திருக்கிறீர்களா? இந்த ஆட்டுக்கால் சூப் வழக்கமான சூப் மாதிரி இல்லாமல் சற்று வித்தியாசமான சுவையில் சூப்பராக இருக்கும்.

Attukal Kulambu Recipe How to Make Attukal Kulambu

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் ஆட்டுக்கால் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் ஆட்டுக்கால் குழம்பை எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையானப் பொருட்கள்:

- ஆட்டுக் கால் - 4
- தனியா - 2 ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
- சீரகம் - அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- கடுகு - கால் ஸ்பூன்
- வர மிளகாய் - 2
- எண்ணெய் - தேவையான அளவு
- புளி - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு

செய்முறை:

- ஆட்டுக்காலை சுத்தம் செய்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். குழம்பு செய்யும் முன் ஆட்டுக்காலை நன்கு தேய்த்து கழுவி விட வேண்டும். சூப் எடுத்த பின் உள்ள எலும்புகளையும் எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில் ஆட்டுக் காலை நெருப்பில் பொசுக்கி, தோலை சுத்தமாக நீக்கி விட வேண்டும். அப்படி சுத்தம் செய்த காலை ஒரு மாதம் போல வைத்து இருந்தாலும் கெட்டுப் போகாது.

- வர மிளகாய், கடலைப் பருப்பு, தனியா, மிளகு, சீரகம் என எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்து, மிக்சியில் போட்டு நன்றாக, நைசாக அரைத்துக் கொள்ளவும்.

- பின்னர் புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

- பின்னர் ஒரு குக்கரில் ஆட்டுக்காலுடன் உப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி சுமார் பத்து விசில் வரும் வரையில் காத்திருந்து பின்னர் இறக்கவும்.

- ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்தவுடன் மஞ்சளை சேர்த்து அதனுடன் அரைத்த பொடி மற்றும் புளிக்கரைசல் மற்றும் சேர்த்து கொதிக்க விடவும்.

- நன்கு கொதித்ததும் வேக வைத்த ஆட்டுக்காலை சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் விட்டு இறக்கவும்.

- அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு ஆட்டுக் கால் குழம்பு தயார். இது இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்தில் ஊற்றி சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, January 4, 2026, 13:34 [IST]
Desktop Bottom Promotion