Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
ஆந்திரா ஸ்டைல் கார சட்னி இந்த பொருளை சேர்த்து அரைங்க... இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்...!
Andhra Style Suraikkai Kara Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னிகள் அரைத்து போரடித்து விட்டதா? புதுசா ஏதாவது சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்ப நம்ம அக்கட தேசமான ஆந்திரா ஸ்டைல் சைடிஷ்களை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான சட்னிகளுக்கு மாற்றாக சற்று காரமான அதே சமயம் ஆரோக்கியமான சட்னியை செய்ய வேண்டுமா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் சுரைக்காய் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும்.
வழக்கமான தக்காளி சட்னி போல அல்லாமல் இதில் சுரைக்காய் சேர்த்து சட்னி அரைக்கப்படுவதால் இந்த சட்னி எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்து விட்டால், அதன்பிறகு அடிக்கடி செய்யத் தொடங்கி விடுவீர்கள்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சுரைக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சுரைக்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நறுக்கிய சுரைக்காய் - 2 கப்
- பச்சை மிளகாய் - 5
- பூண்டு - 3 பல்
- எண்ணெய் - தேவையான அளவு
- பெரிய தக்காளி - 1
- புளி - நெல்லிக்காய் அளவு
- கொத்தமல்லி - 2 கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- வர மிளகாய் - 2
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- ஆந்திரா ஸ்டைல் சுரைக்காய் தக்காளி சட்னியை செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
- கீறிய பச்சை மிளகாயை அதில் சேர்த்து ஒரு நிமிடம் லேசாக வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
- பின்னர் பூண்டு பற்கள் மற்றும் சுரைக்காய் துண்டுகளை வாணலியில் சேர்த்து மென்மையாகவும் வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கி, தட்டில் மாற்றி ஆற வைக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியை புளியுடன் சேர்த்து ஒரு நிமிடம் ஒன்றாக வதக்கவும். அடுப்பை அணைத்து விட்டு நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து சுருங்கும் வரை கிளறவும்.
- இந்த கலவை குளிர்ந்ததும், வதக்கிய சுரைக்காய், பச்சை மிளகாய் மற்றும் பிற பொருட்களுடன் உப்பு மற்றும் சீரகத்துடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து கரடுமுரடான பேஸ்டாக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
- சட்னியை தாளிப்பதற்கு ஒரு சிறிய கடாயில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கி, கடுகு, சீரகம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.
- அவை வதங்கியதும் பெருங்காயத்தைச் சேர்த்து இறுதியாக கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கி சுரைக்காய் சட்னி மீது ஊற்றவும்.
- இந்த சுரைக்காய் கார சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிடவும், சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications