ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி ரெசிபி... இந்த மாதிரி செய்யுங்க... 1 மாசம் வைச்சு சாப்பிடலாம்...!

Posted By:

Andhra Style Green Chilli Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னிகள் அரைத்து போரடித்து விட்டதா? புதுசா ஏதாவது காரசாரமான சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்ப நம்ம அக்கட தேசமான ஆந்திரா ஸ்டைல் சைடிஷ்களை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான சட்னிகளுக்கு மாற்றாக சற்று காரமான அதே சமயம் சுவையான சட்னியை செய்ய வேண்டுமா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும்.

இந்த சட்னி வழக்கமான தக்காளி சட்னி போல அல்லாமல் மிகவும் வித்தியாசமாக அதேசமயம் காரம், புளிப்பு, இனிப்பு என அனைத்து சுவையும் நிறைந்ததாக இருக்கும். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்து விட்டால், அதன்பிறகு அடிக்கடி செய்யத் தொடங்கி விடுவீர்கள். இந்த சட்னியை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து ஒரு மாதம் கெட்டுப்போகாமல் இருக்கும்.

Andhra Style Green Chilli Chutney Recipe How to Make Green Chilli Chutney

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 100 கிராம் பச்சை மிளகாய்
- 10 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் சீரகம்
- ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு
- 2 ஸ்பூன் வேர்க்கடலை
- தேவையான அளவு எண்ணெய்

செய்முறை:

- பச்சை மிளகாயை நன்றாகக் கழுவி, சிறிது நேரம் உலர விடவும். பின்னர் ஒரு கத்தியால் பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மிளகாய்கள் முழுமையாக வாடி நிறம் மாறும் வரை வதக்கி தனியாக வைக்கவும்.

- பின்னர் அதே சூடான கடாயில் பூண்டு, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அதை முழுமையாக ஆற விடவும்.

- பின்னர் 2 ஸ்பூன் வேர்கடலையையும் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.

- பின் ஒரு மிக்சி ஜாரில் வறுத்த மிளகாய், உப்பு, எலுமிச்சை சாறு, பூண்டு, வேர்க்கடலை மற்றும் கடாயில் மீதமுள்ள சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, கொரகொரப்பான சட்னியாக அரைக்கவும்.

- இதை காற்றுப்புகாத கண்ணாடி ஜாடியில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இது சுமார் ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

- தேவைப்பட்டால் இதை கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, February 1, 2026, 21:30 [IST]
Desktop Bottom Promotion