Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
1 கப் பூண்டு, 10 வர மிளகாய் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு சுருக்குனு இருக்கும்...!
Andhra Style Garlic Chilli Chutney Recipe in Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று முடிவெடுப்பது கடினமாக உள்ளதா? சற்று காரமான அதே சமயம் சுவையான சட்னியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் சட்னியை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் கார சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் சூப்பராக இருக்கும்.
ஒருமுறை இந்த சட்னியை அரைத்து விட்டால் அதன் பிறகு இட்லி, தோசை என்றாலே உங்களுக்கு இந்த சட்னிதான் நியாபகத்திற்கு வரும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ஒரு சில பொருட்களே போதுமானது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிதாகவும் அதேசமயம், சுவையாகவும் இருக்கும். பெரும்பாலான ஆந்திர ஹோட்டல்களில் இந்த சட்னி நிச்சயம் பரிமாறப்படும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 20 பூண்டு பல்
- 10 காஷ்மீரி மிளகாய்
- 2 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் புளி
- ½ டீஸ்பூன் வெல்லம்
- 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- ஒரு கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் 1 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
- அந்த சூடான நீரில் காஷ்மீரி மிளகாய் மற்றும் வர மிளகாயை போட்டு 10 நிமிடம் ஊற விடவும்.
- முழுமையாக ஆறிய பிறகு, சிவப்பு மிளகாய்களை மட்டும் வடிகட்டி எடுக்கவும். இந்த ஊறவைத்த தண்ணீரை வீணாக்காமல் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் வடிகட்டிய வர மிளகாய், காஷ்மீரி மிளகாய், 20 பல் பூண்டு மற்றும் 1 டீஸ்பூன் புளி சேர்க்கவும்.
- பின்னர் ஊறவைத்த தண்ணீரில் இருந்து சிறிதளவு சேர்க்கவும்.
- இதை நன்றாக மென்மையான விழுதாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் ½ டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயைக் காயவைத்து, அதில் அரைத்த மிளகாய் பூண்டு விழுதைச் சேர்க்கவும்.
- மிக்ஸி ஜாரை ¼ கப் தண்ணீர் விட்டு அலசி, அந்த தண்ணீரையும் சேர்க்கவும்.
- கொதிக்கத் தொடங்கும் போது ஒரு மூடியை வைத்து மூடி வைக்கவும்.
- பூண்டின் பச்சை வாசனை போகும் வரை அடிக்கடி கிளறி விடவும்.
- சட்னி நன்கு கொதித்து கெட்டியாகத் தொடங்கும் போது தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்க்கவும்.
- நன்றாக கிளறி விட்டு அரை ஸ்பூன் நல்லெண்ணெயை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு சிறிய கடாயில் ல்லெண்ணெயைக் காயவைத்து, ஒரு டீஸ்பூன் கடுகு மற்றும் சில கறிவேப்பிலைகளைச் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடிக்கத் தொடங்கியதும் அதை சட்னி மீது நன்கு கிளறினால் கலர்புல்லான சுவையான ஆந்திரா ஸ்டைல் பூண்டு வர மிளகாய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications











