Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்..
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
Andhra Style Carrot Pachadi Recipe in Tamil: இட்லி, தோசை செய்வது எவ்வளவு எளிதானதோ அதற்கு என்ன சட்னி செய்வது என்பது மிக மிக கடினமானது. இட்லி, தோசைக்கு வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவற்றைத்தான் பெரும்பாலும் செய்வோம். இது நாளடைவில் சலிப்பை ஏற்படுத்தும். எனவே புதுப்புது சட்னிகளை முயற்சி செய்து பாருங்கள்.

புதிதாக எதாவது சைடிஷ் செய்ய நினைத்தால் இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை முயற்சி செய்து பாருங்கள். இந்த கேரட் பச்சடி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடி என்பது சின்ன வெங்காயம், தயிர் மற்றும் தேங்காய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான பச்சடியாகும். ஆந்திர மக்கள் இந்த கறிவேப்பிலை பச்சடியை சூடான சாதத்தில் போட்டு அதில் நெய் ஊற்றி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 5 நறுக்கிய சின்ன வெங்காயம்
- 2 கேரட் (தோல் சீவி, துருவியது)
- 1 கப் தயிர்
- தேவையான அளவு உப்பு
அரைக்கத் தேவையானவை:
- ¼ கப் துருவிய தேங்காய்
- ½ ஸ்பூன் சீரகம்
- 2 பச்சை மிளகாய்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
தாளிக்க:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து, கொரகொரப்பான கலவையாக அரைத்துக்கொள்ளவும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் துருவிய கேரட் ஆகியவற்றைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் அரைத்த தேங்காய் கலவை மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். இதை கேரட்டுடன் சேர்த்து 30 வினாடிகள் கிளறவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி, கேரட்-தேங்காய் கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும்.
- கேரட் கலவை சற்று ஆறியதும், அதில் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது சுவை பார்த்து, தேவைப்பட்டால் உப்பு சரிசெய்யவும்.
- இப்போது ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளிக்கவும்.
- பிறகு உடைத்த வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- இந்தத் தாளிப்பை பச்சடியின் மீது ஊற்றி நன்றாகக் கலக்கவும். இதனை இட்லி, தோசை அல்லது சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
