Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு
உங்கள் வீட்டில் சாப்பிட எதுவும் இல்லையா? வீட்டில் தோசை மாவு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சூப்பரான ஆந்திரா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ஒன்றை செய்யலாம். அதன் பெயர் தான் புனுகுலு.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் சாப்பிட எதுவும் இல்லையா? வீட்டில் தோசை மாவு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சூப்பரான ஆந்திரா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ஒன்றை செய்யலாம். அதன் பெயர் தான் புனுகுலு. தமிழில் புரியும்படி கூற வேண்டுமானால், தோசைமாவு போண்டா. இந்த புனுகுலு வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தோசை மாவு - 2 கப்
* ரவை - 1 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் தோசை மாவுடன், எண்ணெயைத் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு ஒருசேர கிளறி விட வேண்டும்.
* மாவானது சற்று கெட்டியாக இருக்க வேண்டும். கலந்த மாவை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஒரு ஸ்பூனில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், ஆந்திரா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் புனுகுலு தயார்.
Image Courtesy: yummyoyummy



Click it and Unblock the Notifications










