Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
காளான் வாங்குனா இந்த மாதிரி ஆம்பூர் ஸ்டைல் பிரியாணி செய்யுங்க... இனிமே ஹோட்டல் பக்கமே போக மாட்டிங்க...!
Ambur Style Mushroom Biryani Recipe in Tamil: பிரியாணியையும், நம்மையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். மொகலாயர்களின் கண்டுபிடிப்பான இந்த பிரியாணி இப்போது நமது உணவின் அடையாளமாகவே மாறிவிட்டது. பிரியாணி என்றாலே அது மட்டன் அல்லது சிக்கன் பிரியாணிதான். ஆனால் புரட்டாசி வரப்போவதால் பெரும்பாலான மக்கள் ஒரு மாதத்திற்கு அசைவ உணவு பக்கம் செல்ல முடியாது.
அசைவம் சாப்பிட முடியாத சூழலில் அனைவர்க்கும் கைகொடுப்பது காளான்தான். பிரியாணியில் திண்டுக்கல் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, தலசேரி பிரியாணி, முகலாய பிரியாணி என பல வகைகள் உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு பிரியாணி என்றால் அது ஆம்பூர் பிரியாணி.

ஆம்பூர் பிரியாணி செய்வதற்கு மிகவும் எளிமையான மற்றும் சுவையான பிரியாணியாகும். அதனால்தான் இந்த பிரியாணி மிகவும் பிரபலமானதாக உள்ளது. புரட்டாசி மாதத்தில் ஆம்பூர் ஸ்டைலில் காளான் பிரியாணி செய்து சாப்பிடுவது அசைவ உணவு இல்லாத குறையை ஓரளவுக்கு போக்கும். இந்த பதிவில் காளானை வைத்து சுவையான ஆம்பூர் பிரியாணி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் சீரக சம்பா அரிசி
- 1 கப் காளான்
- 6 வர மிளகாய்
- 1/4 கப் தயிர்
- உப்பு - தேவையான அளவு
- 3 ஸ்பூன் நெய்
- 2 பெரிய வெங்காயம்
- புதினா - ஒரு கைப்பிடி
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
- 2 தக்காளி
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 பச்சை மிளகாய்
- 2 கப் தண்ணீர்
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 4 கிராம்பு
- 2 பிரியாணி இலை
- 2ஏலக்காய்
- 2 இலவங்கப்பட்டை
செய்முறை:
- முதலில் சீரக சம்பா அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- வர மிளகாயை சூடான நீரில் 20 நிமிடங்கள் அல்லது மிளகாய் மென்மையாக மாறும் வரை ஊற வைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கர் அல்லது பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் ஏலக்காய், பிரியாணி இலை, நட்சத்திர சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்கவும்.
- பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடிப் பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் புதினா இலைகள், கொத்தமல்லி இலைகள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த வர மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் தக்காளியைச் சேர்க்கவும், அது மென்மையாக மாறும் வரை வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் காளான் சேர்த்து நன்கு வதக்கவும்.
- காளான் பாதி வெந்ததும் தயிர் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் கழுவி வைத்த சீரக சம்பா அரிசியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- அரிசியை நன்கு கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்ததும் குக்கரை மூடி மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 1 விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும்.
- பின்னர் குக்கரை தம் போட்டு 10 நிமிடம் காத்திருக்கவும்.
- 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து இறுதியாக நெய் சேர்த்து நன்கு கிளறினால் சூடான, சுவையான ஆம்பூர் காளான் பிரியாணி ரெடி!



Click it and Unblock the Notifications
