Just In
- 14 hrs ago
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- 18 hrs ago
வார ராசிபலன் (28.02.2021 முதல் 06.03.2021 வரை) – இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப உஷாரா இருக்கணும்..
- 19 hrs ago
இன்றைய ராசிப்பலன் (28.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…
- 1 day ago
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
Don't Miss
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Automobiles
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆலு பாலக் ரெசிபி
நம்மில் பலருக்கும் ரெஸ்டாரண்ட்டுகளில் சமைக்கப்படும் பல உணவுகள் பிடிக்கும். அதிலும் வட இந்திய உணவுகளுள் சில வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஓர் வட இந்திய உணவு தான் ஆலு பாலக் ரெசிபி. இது சப்பாத்தி, புல்கா, நெய் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்ட அற்புதமாக இருக்கும். இந்த ஆலு பாலக் ரெசிபியை உங்கள் வீட்டிலேயே செய்ய விரும்புகிறீர்களா?
அப்படியானால் கீழே ஆலு பாலக் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாலக் கீரை - 2 கப்
* உருளைக்கிழங்கு - 2
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 1
* தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பட்டைத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* பால் - 1/4 கப் (விருப்பமிருந்தால்)
* க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய்/எண்ணெய் - 2 டீஸ்பூன் + 2 டீஸ்பூன் (உருளைக்கிழங்கை வறுக்க)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பசலைக்கீரையை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது நீரைத் தெளித்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 2-3 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கிக் குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாயைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, அதில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு நாண்ஸ்டிக் பேனில் அந்த உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்/நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
* அடுத்து அதே பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* பின் அரைத்து வைத்துள்ள தக்காளி, மசாலா பொடிகளை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, அரைத்து வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி விடவும்.
* கலவையானது நன்கு கொதித்து, அதன் நிறம் மாற ஆரம்பிக்கும் போது, வறுத்த உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு கிளறி விடவும். அடுத்து பாலை ஊற்றி, கிரேவியை நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியாக மில்க் க்ரீம் சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கினால், சுவையான ஆலு பாலக் தயார்.
Image Courtesy: sharmispassions