Just In
- 58 min ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 6 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 7 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 8 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டெல்லி ஸ்பெஷல் ஆலு சாட் மசாலா எப்படி எளிதாக தயாரிக்கலாம்?- செம்ம டேஸ்ட்டி ரெசிபி!!
சுவையான ஆலு சாட் ரெசிபி எல்லாருக்கும் பிடித்த டெல்லி ஸ்பெஷல் ரெசிபி. அதனை எப்படி எளிதாக தயாரிக்கலாம் என்பது பற்றிய சமையல் குறிப்பு இங்கே சொல்லப்பட்டுள்ளது.
ஆலு சாட் ரெசிபி டெல்லியில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் ஆகும். சாட் என்றாலே எல்லோர் நாக்கிலும் எச்சு ஊற வைத்து விடும். அதிலும் உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்வது இதன் டேஸ்ட்டை மேலும் மேலும் சுவையூட்டுகின்றன.
இந்த காரசாரமான ஆலு சாட் ரெசிபியை எப்படி படிப்படியாக செய்வது என்பதை வீடியோ மற்றும் செய்முறை விளக்கத்துடன் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆலு சாட் ரெசிபியை சீக்கிரமாக செய்வதோடு நமது பசிக்கும் மிகச் சிறந்த உணவாகும். மிகவும் மொறு மொறுப்பான நொறுங்கும் தன்மையுடன், ரொம்ப மிருதுவாக உள்ள உருளைக்கிழங்கை தட்டில் வைத்து இதனுடன் காரசாரமான மசாலா தூவி, இலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை பார்த்தாலே போதும் உங்கள் வயிற்றுக்கும் கண்களுக்கும் விருந்தாகவே மாறிவிடும். இந்த ரெசிபியை கண்டிப்பாக நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
ஆலு சாட் ரெசிபி வீடியோ
Recipe By: ப்ரியங்கா த்யாகி
Recipe Type: ஸ்நாக்ஸ்
Serves: 3-4 நபர்கள்
-
உருளைக்கிழங்கு - 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்)
ஆயில் - வதக்குவதற்கு தேவையான அளவு
உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த மாங்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
புளிக் கரைசல் சட்னி -1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி புதினா சட்னி - 1/2 டேபிள் ஸ்பூன்
ஓமப் பொடி(சேவ்) - 1 சிறிய கிண்ணல் அளவிற்கு
கொத்தமல்லி இலைகள் - நறுக்கியது (அலங்காரத்திற்கு )
மாதுளை - அலங்காரத்திற்கு
-
1.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்த வேண்டும். இப்பொழுது சதுர வடிவில் உள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
2.அது பொன்னிறமாக மாறியதும் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
3.அதனுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும்
4.பிறகு ஆம்சூர் பொடி, சாட் மசாலா மற்றும் சீரகப் பொடி போன்றவற்றை சேர்க்க வேண்டும்
5.பிறகு லெமன் ஜூஸ் கலந்து நன்றாக கலந்து கொள்ளவும்
6.பிறகு புளி கரைசல் மற்றும் கொத்தமல்லி புதினா சட்னி இவற்றை கலக்கவும்
7.இப்பொழுது சேவுகளை அப்படியே அதன் மேல் தூவி நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் மாதுளை விதைகளையும் தூவி அலங்கரிக்கவும்.
8.இறுதியில் இரண்டு சட்னிகளையும் அதன் மேல் வைத்தால் இன்னும் கலர்ஃபுல்லான ஆலு சாட் ரெசிபி ரெடி
- 1.உங்கள் தேவைக்கு ஏற்ப காரங்களை போட்டுக் கொள்ளவும்.
- 2.டயட் இருப்பவர்கள் உருளைக்கிழங்கை வதக்குவதற்கு பதிலாக ஓவனில் வைத்து எண்ணெய் இல்லாமல் சூடுபடுத்தி பயன்படுத்தலாம்.
- கலோரிகள் - 334 காலோரிஸ்
- கொழுப்பு - 27.4 கிராம்
- புரோட்டீன் - 3.2 கிராம்
- கார்போஹைட்ரேட் - 18.7கிராம்
- நார்ச்சத்து - 3.6 கிராம்
ஆலு சாட் செய்முறை
1.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்த வேண்டும். இப்பொழுது சதுர வடிவில் உள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
2.அது பொன்னிறமாக மாறியதும் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
3.அதனுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும்
4.பிறகு ஆம்சூர் பொடி, சாட் மசாலா மற்றும் சீரகப் பொடி போன்றவற்றை சேர்க்க வேண்டும்
5.பிறகு லெமன் ஜூஸ் கலந்து நன்றாக கலந்து கொள்ளவும்
6.பிறகு புளி கரைசல் மற்றும் கொத்தமல்லி புதினா சட்னி இவற்றை கலக்கவும்
7.இப்பொழுது சேவுகளை அப்படியே அதன் மேல் தூவி நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் மாதுளை விதைகளையும் தூவி அலங்கரிக்கவும்.
8.இறுதியில் இரண்டு சட்னிகளையும் அதன் மேல் வைத்தால் இன்னும் கலர்ஃபுல்லான ஆலு சாட் ரெசிபி ரெடி