Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
சப்பாத்தி, பூரிக்கு சூப்பராக இருக்கும்... ஆலு பட்டர் மசாலா
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது நாண் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் ஆலு பட்டர் மசாலா செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது நாண் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த உருளைக்கிழங்கைக் கொண்டு ஒரு அற்புதமான மற்றும் எளிதில் செய்யக்கூடியவாறான ஒரு பட்டர் மசாலா செய்யுங்கள். இந்த உருளைக்கிழங்கு அல்லது ஆலு பட்டர் மசாலா செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது சப்பாத்தி, நாண், பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு ஆலு பட்டர் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆலு பட்டர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெரிய உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து வேக வைத்தது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 3 (அரைத்தது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* க்ரீம் - 1/4 கப்
* கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* கொத்தமல்லி - 1/2 கப்
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 6 பல்
செய்முறை:
* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள கொத்தமல்லி, இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் தக்காளியைப் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி ஒரு பௌலில் போட்டு, சிறிது உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கைப் போட்டு 5 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் வெண்ணெய் ஊற்றி உருகியதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, அரைத்த மசாலாவை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை ஊற்றி நன்கு கிளறி, மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் உருளைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியில் அதில் க்ரீம் மற்றும் கசூரி மெத்தி சேர்த்து கிளறி, இறக்கி, சிறிது பட்டரை சேர்த்து கிளறினால், சுவையான ஆலு பட்டர் மசாலா தயார்.
Image Courtesy:



Click it and Unblock the Notifications











