Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
வீட்டிலேயே ருசியான ஆப்கானி சிக்கன் செய்வது எப்படி?
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது நாண் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சப்பாத்திக்கு சிக்கன் சைடு டிஷ் கேட்கிறார்களா? அப்படியானால் இன்று ஆப்கானி சிக்கனை செய்து கொடுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது நாண் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சப்பாத்திக்கு சிக்கன் சைடு டிஷ் கேட்கிறார்களா? அப்படியானால் இன்று ஆப்கானி சிக்கனை செய்து கொடுங்கள். இந்த ஆப்கானி சிக்கன் செய்வது மிகவும் சுலபம். மேலும் இது சப்பாத்திரி, நாண் ஆகியவற்றிற்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு ஆப்கானி சிக்கன் எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆப்கானி சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* முந்திரி - 15
* தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 4 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் முந்திரி மற்றும் தயிரை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனைப் போட்டு, அத்துடன் அரைத்த முந்திரி பேஸ்ட், மிளகுத் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு, எலுமிச்சை சாறு, பிரஷ் க்ரீம் மற்றும் கசூரி மெத்தி ஆகியவற்றை எடுத்து நன்கு கலந்து குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை மட்டும் சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்ய வேண்டும்.
* பிறகு மீதமுள்ள சிக்கன் ஊற வைத்த கலவையை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான ஆப்கானி சிக்கன் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











