Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
Aadi Perukku Special Pepper Tamarind Rice Recipe in Tamil: ஆடிப் பெருக்கு இன்று மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஆடிப் பெருக்கு என்றாலே அந்த நாளில் விஷேச உணவு சமைப்பது பெரும்பாலான வீடுகளில் இருக்கும் வழக்கமாகும். இந்த ஆடி 18-க்கு ஏதாவது வித்தியாசமாக சமைக்க விரும்பினால் இந்த மிளகு புளியோதரையை முயற்சி செய்து பாருங்கள். வெரைட்டி சாத வகைகளில் பலருக்கும் பிடித்த அதேசமயம் செய்வதற்கு மிகவும் எளிதான சாதம் என்றால் அது புளி சாதம்தான்.

புளி சாதத்தை எப்போதும் வழக்கமான ஸ்டைலில்தான் செய்வோம், ஆனால் இந்த மிளகு புளிசாதத்தின் செய்முறையும், சுவையும் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். மிளகு புளி சாதம் செய்வது மிகவும் எளிதாகவும், புதிய சுவையாகவும் இருக்கும். ஒரே மாதிரியான புளி சாதம் சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த புளி சாதம் புது அனுபவத்தைக் கொடுக்கும்.
உங்களுக்கு வித்தியாசமான மிளகு புளியோதரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு புளியோதரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சாதம் - 1/2 கப்
- புளி - நடுத்தர நெல்லிக்காய் அளவு
- வெல்லம் - ஒரு சிறிய துண்டு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
- எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
- மிளகு - 1 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு பெரிய சிட்டிகை
தாளிக்க:
- நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிது
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- அரிசியைக் குக்கரில் வேகவைத்து, ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். சாதம் ஆறி, உதிரி உதிரியாக வரும் வரை விடவும்.
- புளியை வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து, 2 கப் தண்ணீர் சேர்த்து அதன் சாற்றை எடுக்கவும்.
- ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்துத் தாளித்து நன்றாக வதக்கவும்.
- பின்னர்புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அதனுடன் வெல்லத்தைச் சேர்க்கவும்.
- அதே கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவும். மிளகு வெடிக்கும் வரை வறுத்து, அவற்றை பொடித்து தனியே எடுத்து வைக்கவும்.
- புளிக்கரைசல் நன்கு கொதித்ததும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்க்கவும். பொடியைச் சேர்த்த பிறகு சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- கலவை நன்கு கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- இறுதியாக இந்த கலவையில் சிறிதளவு மிளகுத் தூளைச் சேர்த்து நன்றாகக் கலந்து இதைத் தனியே எடுத்து வைக்கவும். சுவையான புளி விழுது தயார்.
- தேவையான அளவு விழுதைச் சாதத்தில் சேர்த்து, அதனுடன் நல்லெண்ணெயை ஊற்றி நன்கு கிளறினால் சுவையான மிளகு புளி சாதம் ரெடி!



Click it and Unblock the Notifications
