Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
Aadi Amavasya Special Pasi Paruppu Javvarisi Payasam Recipe In Tamil: ஆடி அமாவாசை நாளில் உங்கள் வீட்டில் வடை பாயாசத்துடன் ஒரு படையலை தயார் செய்து, முன்னோர்களுக்கு படைத்து, விரதத்தை முடிப்பார்கள். உங்கள் வீட்டிலும் ஆடி அமாவாசைக்கு பாயாசத்தை செய்வீர்களா?
இந்த அமாவாசைக்கு எப்போதும் செய்வது போன்று பாயாசத்தை செய்ய பிடிக்கவில்லையா? சற்று வித்தியாசமான பாயாசம் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசியும், பாசிப்பருப்பும் இருந்தால், அவற்றைக் கொண்டு பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பருப்பு வேக வைப்பதற்கு...
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப்
ஜவ்வரிசி வேக வைப்பதற்கு...
* ஜவ்வரிசி - 1 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 3 கப்
வெல்ல நீருக்கு...
* வெல்லம் - 2 1/4 கப்
* தண்ணீர் - 1/4 கப்
பாயாசத்திற்கு...
* சுடுநீர் - 3 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
* நெய் - 2 டீஸ்பூன்
* முந்திரி - தேவையான அளவு
* உலர் திராட்சை - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஜவ்வரிசியை நீரில் 2 முறை கழுவி விட்டு, பின் அதில் 3
கப் நீரை ஊற்றி, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை
சேர்த்து லேசாக நிறம் மாறி நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி,
நீரில் 2 முறை கழுவ வேண்டும்.
* பின் குக்கரில் கழுவி வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, 1 கப் நீரை
ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* அதன் பின் ஒரு அகலமான வாணலியில் ஊற வைத்த ஜவ்வரிசியை நீருடன்
அப்படியே ஊற்றி, அடுப்பில் வைத்து, ஜவ்வரிசியை வேக வைக்க
வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் பொடித்த
வெல்லத்தை சேர்த்து, அதோடு 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, வெல்லத்தைக்
கரைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மற்றொரு அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் ஜவ்வரிசி
வெந்துவிட்டதா என்று பார்த்து, வேக வைத்துள்ள பாசிப்பருப்பை மசித்து
சேர்க்க வேண்டும்.
* ஜவ்வரிசி நன்கு வெந்துவிட்டால், பின் அதில் வெல்ல நீரை வடிகட்டி
ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் சுடுநீரை 3 கப் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி, 1 கப்
கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி அடுப்பை அணைத்துவிட
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
உருகியதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து ப்ரை செய்து,
பாயாசத்துடன் சேர்த்து கிளறினால், சுவையான பாசிப்பருப்பு ஜவ்வரிசி
பாயாசம் தயார்.



Click it and Unblock the Notifications








