ஆடி அமாவாசை 2024: அமாவாசைக்கு கண்டிப்பாக சமைக்க வேண்டிய காய்கறிகள் என்னென்ன?

Posted By:

நாளை ஆடி அமாவாசை, எப்போதுமே அமாவாசையில் சில உணவுகளை கண்டிப்பாக சமைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.. அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய பட்சம் அமாவாசையில் கண்டிப்பாக இதை ஃபாலோ பண்ண வேண்டும் என்கிறது சாஸ்திரம்..

ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து இலை போட்டு படையலாக வைக்க வேண்டும்.. அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில் சிலவற்றை பயன்படுத்தக்கூடாது. அதேப்போன்று சில காய்கறிகளை சேர்த்து சமைத்தால் வீட்டிற்கு நன்மையை உண்டாகும் என்பது ஐதீகம்.

Aadi Amavasya 2024 add these vegetables on Amavasai And must avoid this

அமாவாசை காய்கறிகளில் வாழைக்காய்,பூசணிக்காய், தண்டு, அகத்துக்கீரை, பாகற்காய், பிரண்டை மற்றும் பலாக்காய்க்கு மட்டும் தனி முக்கியத்துவம் உண்டு. இதற்கு புராணங்களில் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. இந்த காய்கறிகள் எதற்கு சமமானவை என்பதை உணர்த்துவதற்காக சொல்லப்படும் இந்த கதை பற்றியும் வேறு என்னென்ன காய்களை சமையலில் சேர்க்கக்கூடாது என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

ஆடி அமாவாசையில் காய், கனி, கிழங்கு, கீரை சமைக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. இதில் அமாவாசை சமையலிலும் சரி, அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் போது அந்தணருக்கு கொடுக்கும் பொருட்களிலும் சரி வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பார்கள். அதற்கு காராணம், வாழையடி வாழையாக நமது குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் பயன்படுத்தப்படுவதாக நமது வீட்டு முன்னோர்கள் சொல்வார்கள். அதே போல் அமாவாசை நாளில் பாகற்காய், பிரண்டை, பூசணிக்காய், தண்டு, அகத்துக்கீரை, பலாக்காய் கண்டிப்பாக சமைக்க வேண்டும்..

அதற்கு காரணமாக சில புராணக்கதைகள் சொல்லப்படுகிறது. வசிஷ்ட முனிவர், விஸ்வாமித்ரரை சந்தித்து, தனது வீட்டில் சிரார்த்தம் செய்ய உள்ளதால், தங்கள் வீட்டிற்கு உணவு அருந்த வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். வசிஷ்டரின் இந்த அழைப்பை ஏற்ற விஸ்வாமித்ரர், தனக்கு 1008 காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்க வேண்டும் என கூறினார். இதை கேட்ட வசிஷ்டர் திகைத்து போனார்.

ஆனால் வசிஷ்டரின் மனைவியும் அருந்ததி, விஸ்வாமித்ரரின் வார்த்தைகளை ஏற்று, நீங்கள் கூறியபடி 1008 காய்கறிகளை சமைத்து பரிமாறுகிறேன் என பணிவுடன் பதிலளித்தாள். பின்னர் சமையலும் செய்து வாழை இலை போட்டு உணவுகளை பரிமாற துவங்கினாள் அருந்ததி. ஆனால் அதை பார்த்த வசிஷ்டர் கோபமடைந்தார்..

என்ன இது நான் 1008 காய்கறிகள் தானே கேட்டேன் என்றார்.. அதற்கு பதிலளித்த அருந்ததி, தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை முனிவரே நான் 1008 காய்களைதான் வைத்துள்ளேன் என்றார்.. அதற்கு அவர் விளக்கமும் கொடுத்தார். அதாவது, பாகற்காய் 100 காய்களுக்கும், பிரண்டை 300 காய்களுக்கும், பலாக்காய் 600 காய்கறிக்கும் சமம் ஆகும். இவை ஆயிரம் காய்கறிகள் ஆகி விட்டது. இதோ எட்டு வாழைக்காய்களை வைத்துள்ளேன். மொத்தம் 1008 காய்கறிகள் ஆகி விட்டது" என கூறினாள். இதை அறிந்த பின் வசிஷ்டர் அருந்ததியின் புத்திக்கூர்மையை பாராட்டினார் என்கிறது புராணங்கள்..

[ of 5 - Users]
Desktop Bottom Promotion