Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
குழந்தை பிறப்பதைத் தடுக்க அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட மோசமான முறைகள் என்னென்ன தெரியுமா?
இப்போது குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெரும்பாலானவர்களுக்கு இருந்தாலும், பழங்காலத்தில் அதிகளவு குழந்தைகளை பெற்றுக்கொள்வதை பெரும்பாலான பெற்றோர்கள் விரும்பவில்லை. துரதிர்ஷ்டவசமாக கடந்த காலத்தில் கருத்தடை முறைகள் அவ்வளவு பிரபலமானதாக இல்லை, மேலும் வழக்கத்தில் இருந்த கருத்தடை முறைகளும் மிகவும் விசித்திரமானதாக இருந்தது.

தற்போது சில வெளிப்படையான காரணங்களுக்காக குறிப்பிட்ட நேரத்தில் கர்ப்பத்தைத் தடுக்க, தம்பதிகள் சில மருத்துவ நுட்பங்களைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள். இருப்பினும், பல தம்பதிகள் கர்ப்பத்தைத் தடுக்க வித்தியாசமான முறைத் தேர்வு செய்கிறார்கள். கர்ப்பத்தைத் தடுக்க மக்கள் பயன்படுத்திய சில விசித்திரமான வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
யோனி ஸ்டீமிங்
கடந்த காலத்தில் கர்ப்பத்தைப் பற்றிய அறிவு மக்களுக்கு மிகவும் குறைவாக இருந்தது மற்றும் கர்ப்பத்தைப் பற்றி மக்களுக்கு போதுமான தெளிவு இல்லாததால், கருத்தரிப்பைத் தவிர்க்க பல வித்தியாசமான முறைகள் கையாளப்பட்டன. அத்தகைய ஒரு வித்தியாசமான முறைதான் யோனி ஸ்டீமிங் ஆகும். சில மூலிகைகள் போட்டு வேகவைத்த பானையின் மீது பெண்கள் நிற்கவைப்பட்டனர். இந்த மூலிகை நீராவி பெண்களின் பிறப்புறுப்பிற்குள் சென்று கருத்தரிப்பதைத் தடுக்கும். அதிர்ஷ்டவசமாக இந்த வழக்கம் இப்போது உபயோகத்தில் இல்லை.
எலுமிச்சையை பயன்படுத்துதல்
கர்ப்பத்தைத் தடுக்க பெண்களின் பிறப்புறுப்பிற்குள் எலுமிச்சைத் துண்டுகள் அல்லது சாற்றை பயன்படுத்துவார்கள் என்றால் உங்கள் நம்ப முடியுமா? ஆனால் இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்தது. எலுமிச்சைச்சாற்றில் விந்தணுக்களை கொல்லும் சக்தி இருப்பதாக நம்பப்பட்டதால் கர்ப்பத்தை தடுக்க எலுமிச்சை பயன்படுத்தப்பட்டது.
ஈயம் மற்றும் பாதரசம்
பண்டைய காலங்களில் தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க ஈயம், பாதரசம் மற்றும் ஆர்சனிக் போன்ற ஆபத்தான பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. கருத்தரிப்பதைத் தடுக்க பெண்கள் இந்த நச்சு இரசாயனங்களின் கலவையை விழுங்க கட்டாயப்படுத்தப்பட்டனர்னர். ஆனால் இவை பெண்களுக்கு இவை சிறுநீரகம் மற்றும் நுரையீரல் செயலிழப்பிற்கு வழிவகுத்ததால் பிற்காலத்தில் இந்த முறை தடைசெய்யப்பட்டது.
ஆலிவ் எண்ணெய்
பழங்காலத்தில் மக்கள், சிடார் எண்ணெயுடன் கலந்த ஆலிவ் எண்ணெயை கர்ப்பத்தைத் தடுக்க பயன்படுத்தினர். இந்தக் கலவையானது விந்தணுக்களை கொல்லும் குணங்களைக் கொண்டிருப்பதாகவும், விந்தணுக்களின் இயக்கத்தைக் குறைக்கும் என்றும் பழங்கால மக்கள் நம்பினர்.
நெய் மற்றும் தேன்
பண்டைய காலத்தில் பெண்கள் வீட்டில் எளிதாக கிடைக்கும் சில பொருட்களை கர்ப்பத்தைத் தடுக்க பயன்படுத்தினர். பழங்காலத்தில் நெய், தேன் மற்றும் சில மர விதைகளை கலந்து பிறப்புறுப்பில் வைக்கப்பட்டது. மேலும் கல் உப்பையும் விந்தணுக் கொல்லியாக பயன்படுத்தினார்.



Click it and Unblock the Notifications

