Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கர்ப்பிணி பெண்கள் இந்த 4 பழங்களை தெரியாமகூட சாப்பிடக்கூடாதாம்... இதனால் பெரிய ஆபத்துகள் வருமாம்...!
கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவர்களின் உணவு விஷயத்தில்தான். ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள் அவர்களின் ஆரோக்கியம் மட்டுமின்றி கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாத கர்ப்ப காலத்தைப் பெறலாம். காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸ் என ஆரோக்கியமான அனைத்து பொருட்களையும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் இந்த ஆரோக்கியமான பொருட்களிலும் சில விதிவிலக்குகள் உள்ளது.

சாதாரண காலக்கட்டத்தில் எடுத்துக்கொள்ளும் போது ஆரோக்கியமானதாக இருக்கும் சில பொருட்கள் கர்ப்ப காலத்தில் ஆபத்தானவையாக மாறும். உதாரணத்திற்கு குறிப்பிட்ட பழங்களை கர்ப்பக் காலத்தில் எடுத்துக்கொள்வது பெண்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அன்னாசி
கர்ப்ப காலத்தில், குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் சாப்பிடவே கூடாத பழங்களில் ஒன்று அன்னாசி. அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது புரதத்தை உடைக்கிறது. இது கருப்பை வாயை மென்மையாக்கும், இதனால் குறைப்பிரசவம் மற்றும் கருச்சிதைவு போன்ற எதிர்பாராத மோசமான விளைவைக் கொண்டிருக்கலாம். அன்னாசி உடலை வெப்பப்படுத்தும் இயல்பைக் கொண்டது, எனவே கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய முதலிடத்தில் அன்னாசிப்பழம் உள்ளது.
பப்பாளி
இது இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பப்பாளியில் உடலுக்குத் தேவையான மேக்ரோநியூட்ரியன்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருந்தாலும், அவை கர்ப்பிணிப் பெண்கள் தொடவே கூடாத பழங்களில் ஒன்றாகும். பப்பாளி உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யலாம், இது கர்ப்ப காலத்தில் நல்லதல்ல. இது தவி பப்பாளியில் லேடெக்ஸ் நிறைந்துள்ளது, இது கருப்பைச் சுருக்கம், இரத்தப்போக்கு மற்றும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கிறது. இது கருவின் வளர்ச்சியையும் பாதிக்கலாம், எனவே இதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பழுத்த மற்றும் பழுக்காத பப்பாளி இரண்டையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
திராட்சை
இதற்கு தெளிவான சான்றுகள் எதுவும் இல்லையென்றாலும், கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய பழங்களில் திராட்சையும் ஒன்றாகும். திராட்சைகளில் சகித்துக்கொள்ள முடியாத அளவு பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது, அவை சாகுபடியின் போது பூச்சிகளால் சாப்பிடுவதைத் தவிர்ப்பதற்காக தெளிக்கப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிகள் அதன் முற்றிலும் முதிர்ச்சியடையாத நோயெதிர்ப்பு அமைப்புடன் கருவில் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.
பேரீட்சை
இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் உடனடி ஆற்றலை வழங்கும், தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பேரீச்சம்பழம் நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், கோடையில் அதிக எண்ணிக்கையிலான பேரீச்சம்பழங்களை உட்கொள்வது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை, ஏனெனில் அவை தாயின் உடலில் அதிக அளவு வெப்பத்தை உருவாக்குகின்றன. இது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும், குறிப்பாக கர்ப்பத்தின் பிற்பகுதியில் அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
