For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு கடலை கொடுக்கலாமா? கூடாதா? கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்

உங்கள் குழந்தைகளுக்கு கடலை கொடுக்கலாமா கூடாது என்பது எல்லா பெற்றோர்களிடமும் ஒரு பெரிய புதிராகவே உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு எப்போது கடலை கொடுக்க வேண்டும் எவ்வளோ கொடுக்க வேண்டும் என்பது தெரிந்து இருக்

|

உங்கள் குழந்தைகளுக்கு கடலை கொடுக்கலாமா கூடாது என்பது எல்லா பெற்றோர்களிடமும் ஒரு பெரிய புதிராகவே உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு எப்போது கடலை கொடுக்க வேண்டும் எவ்வளோ கொடுக்க வேண்டும் என்பது தெரிந்து இருக்க வேண்டும். எத்தனை மாத குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதும் தெரிந்த பின்பு நீங்கள் கொடுக்காலம்.

Babies Have Peanuts

அமெரிக்காவில் நடத்திய ஆராய்ச்சியில் குழந்தைகளுக்கு கடலை கொடுப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி அறிவித்துள்ளது. வேர்க்கடலை நோய்களிலிருந்தும் தொற்றுகளிலிருந்தும் குழந்தைகளை பாதுகாக்கிறது. உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. மேலும் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. குழந்தைகளுக்கு பீனட் பட்டர் கொடுப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். பார்வைக் கோளாறுகள் தொடர்பான பிரச்சனைகளைச் சரி செய்கிறது. கடலையில் உள்ள கால்சியம் அவர்களின் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட கடலைகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பது முக்கியம் தான். ஆனால் அதில் சில சிக்கல்கள் உள்ளன. குழந்தைகளுக்கு எவ்வாறு கடலைகளை கொடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரம்ப காலம்

ஆரம்ப காலம்

குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமைகளை தடுக்க அவர்களின் ஆரம்பக் காலத்திலேயே கடலைகளைக் கொடுக்கலாம். உங்கள் மருத்துவரின் அனுமதியுடன் 4 முதல் 6 மாத குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அல்லது உங்கள் குழந்தைகளின் 6 மாத காலம் முடிந்த பிறகும் கொடுக்கலாம்.

MOST READ: உங்கள் குழந்தையின் அன்பை நீங்கள் பெற வேண்டுமா?

ஒவ்வாமை அல்லது அல்ர்ஜி

ஒவ்வாமை அல்லது அல்ர்ஜி

உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை அல்லது அழற்ஜி சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும் போது வேர்க்கடலையைக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அழற்சி சம்மந்தமான பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு குறைந்தது 3 வருடங்கள் வரையிலும் கடலைகளை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதிக உடல் பலவீனம் அற்ற குழந்தைகள் தங்களது உணவில் மிக விரைவில் கடலைகளை சேர்த்துக் கொள்வது நல்லது என்றும் கூறுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் ஒவ்வாமை ஏற்படும் நிலை குறைவாக இருக்கும்.

ஒவ்வாமை ஆபத்து

ஒவ்வாமை ஆபத்து

உங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட வழி உள்ளதா என்பதை நீங்கள் முதலில் அறிந்துக் கொள்ளவேண்டும். அதாவது உங்கள் குழந்தைகளுக்கு முட்டை அழற்சி அல்லது தோல் அழற்சி இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் குழந்தைகளுக்கு நீங்கள் கடலையை கொடுக்க கூடாது. அப்படியில்லையெனில் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் சென்று உங்கள் குழந்தைக்கு கடலையை கொடுப்பதற்கான சரியான நேரத்தை கேட்டு அறிந்து கொடுங்கள்.

முழு வேர்க்கடலை

முழு வேர்க்கடலை

உங்கள் குழந்தைகளுக்கு முழு வேர்க்கடலை கொடுப்பது சரியானது அல்ல. இது சரியாக சேமிக்காமல் மூச்சு திணறலுக்கு வழிவகுக்கும். குழந்தைகளுக்கு முதன் முதலில் கடலைகளை கொடுக்கும் போது கடலை பொடியாக தண்ணீரில் கலக்கி கொடுக்கலாம்.

பீனட் பட்டர்

பீனட் பட்டர்

கடைகளில் விற்கப்படும் பீநட் பட்டர் எடுத்து பன்களில் தடவி கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு உண்ண கடினமாக இருப்பதால், 2 தேக்கரண்டியளவு பீனட் பட்டர் எடுத்து 2 தேக்கரண்டியளவு வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து திரவமாக கொடுக்கலாம்.

MOST READ:கர்ப்ப காலத்தின் போது பெண்கள் உலர்ந்த திராட்சைகளை சாப்பிடலாமா ?

அடிக்கடி கொடுத்தல்

அடிக்கடி கொடுத்தல்

உங்கள் குழந்தைக்கு ஒரு முறை கொடுத்து விட்ட பிறகு அவற்றை நிறுத்தி விட கூடாது. அவர்களுக்கு அடிக்கடி கடலைகளை கொடுக்க வேண்டும். ஒரு வேலை உங்கள் குழந்தைக்கு வேர்க்கடலை ஒவ்வாமை இருந்தால் அவற்றை நீங்கள் கொடுக்க வேண்டாம். கடலை கொடுப்பதற்கு முன்பு ஒரு முறை மருத்துவரை அணுகி அனுமதி பெற்று விட்டு கொடுக்க வேண்டும். மீறி கடலை கொடுத்த பிறகு ஏதேனும் எதிர்வினை உதடு வீக்கம், இருமல், வாந்தி அல்லது கொசு கடித்த தடிப்புகள் போல் இருந்த மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Can Babies Have Peanuts?

The study says babies should be given peanuts early in order to prevent allergic reactions. In fact, multiple reports in the past decades have shown the benefit of introducing peanuts to high-risk babies when they are between 4 to 6 months old.
Desktop Bottom Promotion