For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ பாதுகாப்பானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு என்ன ஷாம்பூ பயன்படுத்த வேண்டும் என்பதில் சற்று குழப்பத்தில் தான் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் நிறைய ஷாம்பூகள் சந்தைகளில் வலம் வருகிறது. ஆனால் இதில் எதை குழந்த

|

பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு என்ன ஷாம்பூ பயன்படுத்த வேண்டும் என்பதில் சற்று குழப்பத்தில் தான் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் நிறைய ஷாம்பூகள் சந்தைகளிலில் வலம் வருகிறது. ஆனால் இதில் எதை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது பெரும் குழப்பமாகவே இருந்து வருகிறது.குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஷாம்பூகளில் எந்த விதமான கெமிக்கல்ஸ் இல்லாமல் இருக்க வேண்டும்.

Choose The Best Baby Shampoo for Your baby

குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஷாம்பூகளில் பெரும்பாலானவை சுத்தமானவை மற்றும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பாதுகாப்பான ஷாம்பூகளை தான் பயன்படுத்த வேண்டும் என்று கருதுவார்கள். இதில் முக்கியமானது ஆர்கானிக் க்ஷாம்பூ இது குழந்தைகளின் முடிகளை சுத்தம் செய்து பளபளப்பாக மற்றும் மென்மையாக மாற்றுகிறது. பொதுவாக எல்லா குழந்தைகளின் ஷாம்பூகளிலும் சிறிது வாசனை திரவியம் கலந்து இருக்கத்தான் செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆர்கானிக் ஷாம்பூ

ஆர்கானிக் ஷாம்பூ

குழந்தைகளுக்கு நிறைய வகையான சரும பாதுகாப்பு பொருட்கள் உள்ளன. அதில் முக்கியமாக பெற்றோர்கள் பார்த்து வாங்க வேண்டியது ஆர்கானிக் உள்ள ஷாம்பூகள். இந்த ஷாம்பூகளை உபயோகிப்பதால் எந்தவித ஆபத்தும் உங்கள் குழந்தைங்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்து விட்டு பயன்படுத்துங்கள். சந்தைகளில் நிறைய வகையான ஆர்கானிக் ஷாம்பூகள் உள்ளன. ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பாதுகாப்பான ஒன்றை தேர்வு செய்வது அவசியம்.

MOST READ: குழந்தைகளின் தொப்புள்கொடி பின்னாடியும், குளிக்க வைக்கறதுக்கும் இவ்ளோ விஷயங்கள் இருக்கா

இயற்கையான ஷாம்பூ

இயற்கையான ஷாம்பூ

குழந்தைகளின் ஷாம்பூகளை தேர்வு செய்யும் போது இயற்கையான ஷாம்பூகளை தேர்ந்து எடுத்து தேர்வு செய்ய வேண்டும். பல ஷாம்பூகள் மென்மையானவை மற்றும் இயற்கையானவை என்று கூறினாலும் அவற்றில் சில இரசாயனங்கள் மற்றும் கெமிக்கல்கள் கலந்து உள்ளன. எனவே சரியான ஷாம்பூவை தேர்வு செய்வது அவசியம்.

ஒவ்வாமை குறைந்த ஷாம்பூ

ஒவ்வாமை குறைந்த ஷாம்பூ

குழந்தைகளுக்கான ஷாம்பூகள் எப்போதும் ஒவ்வாமையற்றதாக இருக்க வேண்டும். எல்லாவற்றை விட முக்கியமானது மென்மையாகவும் ஒவ்வாமை குறைந்ததாகவும் இருப்பதே சிறந்தது.

லேபிள்கள் வாசித்தல்

லேபிள்கள் வாசித்தல்

குழந்தைகளுக்கான ஷாம்பூக்களை வாங்குவதற்கு முன்பு மிக முக்கியமான ஒன்று. லேபிள்களை வசிப்பது. நீங்கள் கண்டிப்பான முறையில் அதில் உள்ள உட்பொருள்களை வாசிக்க வேண்டும். சில ஷாம்பூகளில் மோசமான கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும் இது குழந்தைகளுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே உட்பொருட்களை வாசித்துப் பார்த்துவிட்டு ஷாம்பூகளை வாங்க வேண்டும்.

வைட்டமின் உள்ள ஷாம்பூ

வைட்டமின் உள்ள ஷாம்பூ

இப்போது விற்கப்படும் ஷாம்பூகளில் நிறைய விட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்றாகும். மேலும் இந்த விட்டமின்கள் நிறைந்த ஷாம்பூகள் குழந்தைகளின் முடி மற்றும் முடியின் வேர்களுக்கு நல்ல பலனைத் தருவதாகும்.

ரசாயனங்கள் மற்றும் சாயங்கள்

ரசாயனங்கள் மற்றும் சாயங்கள்

குழந்தைகளின் ஷாம்பூகளில் நிறைய வாசனை திரவியங்கள், கெமிக்கல்ஸ் மற்றும் முடிகளுக்கு சாயம் போன்றவை கலக்கின்றனர். இது டீனேஜ் பயன்பாடுகளுக்கு நல்லது ஆனால் குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம். இது குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது அல்ர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த மாதிரியான ஷாம்பூகளை குழந்தைகளுக்கு உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

MOST READ: குழந்தைகளுக்கு கடலை கொடுக்கலாமா? கூடாதா? கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்

ஷாம்பூ வகைகள்

ஷாம்பூ வகைகள்

குழந்தைகளின் ஷாம்பூகளில் பல வகைகள் உள்ளன. அதாவது மூலிகை ஷாம்பூ, நச்சுதன்மையற்ற ஷாம்பூ, கண் எரிச்சல் இல்லாத ஷாம்பூ, பொடுகு போக்கும் ஷாம்பூ, கற்றாழை ஷாம்பூ மற்றும் ஒட்டாத ஷாம்பூ, என பல வகையான ஷாம்பூகள் மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஷாம்பூ நீங்கள் தேர்வு செய்வது உங்கள் குழந்தைகளின் வயதை பொருத்தும் அமையும். குழந்தைகளின் முடியை வாரத்திற்கு 3 முறை அலசலாம் அல்லது குறைந்தது 1 முறையாவது கண்டிப்பான முறையில் அலச வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற கெமிக்கல் இல்லாத ஷாம்பூகளை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Choose The Best Baby Shampoo for Your baby

Parents basically struggle a lot in order to find the best baby shampoo for their kids. Nowadays, a lot of options are available for infants, babies, and toddlers. These shampoos for babies have really taken the market by storm. These don’t contain chemicals and thereby parents prefer to use it.
Story first published: Wednesday, August 14, 2019, 14:46 [IST]
Desktop Bottom Promotion