For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுகப்பிரசவம், சிசேரியன் பிரசவம் தெரியும்... அதென்ன தாமரை பிரசவம்? இத படிங்க புரியும்...

சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை பிரசவம், தண்ணீர் பிரசவம் என்னும் வகைகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தாமரை பிரசவம் குறித்து நீங்கள் அறிந்ததுண்டா?

|

கருவில் உள்ள குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவருவதை நாம் பிரசவம் என்று கூறுகிறோம். பிரசவம் பல வகையில் நடந்தேறுகிறது. சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை பிரசவம், தண்ணீர் பிரசவம் என்னும் வகைகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தாமரை பிரசவம் குறித்து நீங்கள் அறிந்ததுண்டா?

All You Need To Know About Lotus Childbirth

தாமரை பிரசவத்திற்கான அடையாளங்கள் வரலாற்று காலங்களில் இருப்பதை நாம் கண்டறிய முடியும். இன்றும் உலகின் சில இடங்களில் இந்த முறையில் பிரசவம் நடந்து வருகிறது. தாமரை பிரசவம் என்றால் என்ன என்பது பற்றியும், அதன் நன்மை தீமைகள் குறித்தும் இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ளவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாமரை பிரசவம் என்றால் என்ன?

தாமரை பிரசவம் என்றால் என்ன?

குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டாமல் அப்படியே குழந்தையுடன் இணைத்து வைப்பது தாமரை பிரசவமாகும். இது தானாக விழும்வரை குழந்தையை நஞ்சுக்கொடியுடன் பிணைக்கிறது. நஞ்சுக்கொடி குழந்தையுடன் இணைக்கப்பட்டு, தொப்புள் கொடியின் மீதமுள்ள பகுதி ஒரு முடிச்சாக கட்டப்பட்டுவிடும். 3-8 நாட்களுக்குள் இந்த கொடி தானாக விழுந்துவிடும். பிரசவத்தில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை வெட்டி எடுத்துவிடுவது பொதுவான பழக்கமாகும். ஆனால் தாமரை பிரசவத்தில் தொப்புள்கொடி வெட்டப்படாமல் அப்படியே வைக்கப்படுவதால் இந்த வகையில் மற்ற பிரசவத்தைக் காட்டிலும் இது வேறுபடுகிறது.

தாமரை பிரசவத்தில் இருக்கும் நன்மைகள்:

தாமரை பிரசவத்தில் இருக்கும் நன்மைகள்:

இரத்த ஓட்டம்

குழந்தை பிறந்த அடுத்த சில நாட்களுக்கு தொப்புள்கொடியை வெட்டாமல் இருப்பதால் குழந்தையின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இயற்கையாகவே இந்த கொடி விழுவதற்கான வழியாகவும் இது உள்ளது.

ஹீமோகுளோபின் அளவில் அதிகரிப்பு

ஹீமோகுளோபின் அளவில் அதிகரிப்பு

தாமரை பிரசவத்தில் நஞ்சுக்கொடியில் அமைந்துள்ள சிவப்பு இரத்த அணுக்கள், இரும்பு மற்றும் ஊட்டச்சத்துகள், குழந்தையின் உடலுக்குள் மாற்றம் செய்யப்படுகிறது. தொப்புள்கொடி தாமதமாக கீழே விழுவதால் தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்களை குழந்தையின் உடல் உறிஞ்சுகிறது.

குழந்தைக்கு உளவியல் ரீதியிலான அதிர்ச்சி குறைகிறது

குழந்தைக்கு உளவியல் ரீதியிலான அதிர்ச்சி குறைகிறது

பிரசவம் மூலமாக குழந்தை முதன்முதலாக இந்த உலகை பார்க்கிறது. குழந்தையுடன் தொப்புள்கொடி இணைக்கப்பட்டிருப்பதால் தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்த பின்னும் குழந்தைக்கு ஒரு சௌகரியமான உணர்வு கிடைக்கிறது. மற்ற பிரசவங்களில் குழந்தைக்கு உண்டாகும் அதிர்ச்சி மற்றும் பயம், தாமரை பிரசவத்தில் குறைவதாக நம்பப்படுகிறது.

தாமரை பிரசவத்தில் இருக்கும் தீமைகள்:

தாமரை பிரசவத்தில் இருக்கும் தீமைகள்:

தொற்று பாதிப்பிற்கான அபாயம்

பிரசவத்திற்கு பிறகு தொப்புள்கொடி என்பது அடிப்படையில் ஒரு இறந்த உறுப்பாக மாறுகிறது. மேலும் அது அழுகத் தொடங்கிவிடுகிறது. இதிலிருந்து ஒருவித துர்நாற்றம் வெளிவரலாம், மற்றும் இதன் மூலமாக தொற்று பாதிப்பிற்கான அபாயமும் அதிகரிக்கலாம்.

அடிக்கடி சரியான முறையில் சுத்தம் செய்வது அவசியம்

அடிக்கடி சரியான முறையில் சுத்தம் செய்வது அவசியம்

பிறந்த குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் மென்மையானது மற்றும் அதிக உணர்திறன் கொண்டது. ஒரு இறந்த உறுப்பு எந்த நேரத்திலும் குழந்தைக்கு விஷமாக மாறலாம். அதனால் நஞ்சுக்கொடி சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஒரு நாளில் பல முறை அதனை கிருமிநீக்கம் செய்வது மிகவும் அவசியமாகும்.

குழந்தைப்பேறுக்கான மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று தாமரை பிரசவ முறையை நீங்கள் முயற்சிக்கலாம். இதன் நன்மை மற்றும் தீமைகளை கணக்கில் கொண்டு மருத்துவரின் வழிகாட்டுதல் படி பிரசவத்தில் எந்த வழிமுறையை தேர்வு செய்வது என்பதை நீங்கள் முடிவெடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

All You Need To Know About Lotus Childbirth In Tamil

Here is all you need to know about lotus childbirth in tamil. Read on...
Story first published: Saturday, September 19, 2020, 18:04 [IST]
Desktop Bottom Promotion