For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மஞ்சள் நிற பிறப்புறுப்பு வெள்ளைப்படுதல் நிகழ்வதற்கான காரணங்கள் என்னென்ன?

பிறப்புறுப்பில் வெள்ளையோ மஞ்சளோ சிவப்போ - ஏன் திரவம் வெளிப்படுகிறது, அதற்கு என்ன காரணம் என்றால், பிறப்புறுப்பு மற்றும் கருப்பையில் காணப்படும் பாக்டீரியாக்கள், இறந்த செல்கள், வளர்ச்சி குன்றிய செல்கள்,

|

பிறப்புறுப்பில் வெளியேற்றம் என்பது ஆண் மற்றும் பெண்களின் உடலில் மாறுபடும்; ஆண்களில் வெள்ளை நிறத்திலும், பெண்களில் சாதாரண நாட்களில் வெள்ளை நிறத்திலும், மாதவிடாயின் பொழுது இரத்தமும் பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும். இதுவே ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் மஞ்சள் நிறமாக அல்லது பிறப்புறுப்பில் வெளிப்படும் திரவத்தின் நிறம், அளவு, மணம் மாறுபட்டால், அது உடலில் ஏற்பட்டுள்ள நோய்களையும், உடலின் அசாதாரண நிகழ்வுகளையும் குறிக்கிறது.

causes and remedies for yellow discharge during pregnancy

இந்த பதிப்பில் கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை குறித்து பார்க்கலாம்; அதாவது கர்ப்பிணி பெண்களில் பிறப்புறுப்பில் வெள்ளைப்படுதல் மஞ்சள் நிறமாக நடக்க என்ன காரணம், அவ்வாறு நடப்பது அபாயமானதா, அதை எப்படி குணப்படுத்துவது என்று இங்கு படித்து பயனடையலாம்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் நிற வெளிப்பாடு

மஞ்சள் நிற வெளிப்பாடு

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தல் போன்ற காரணங்களால், அவர்தம் பிறப்புறுப்பில் மஞ்சள் நிற வெளிப்பாடு நிகழ்கிறது. பிறப்புறுப்பில் மஞ்சள் நிற வெளிப்பாடு நிகழ்கையில் அதில் வெளிப்படும் விஷயங்கள் என்னவென்றால், பிறப்புறுப்பில் காணப்படும் பழைய செல்கள், பாக்டீரியாக்கள், கருப்பை வாயில் காணப்படும் இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் போன்றவை வெளியேற்றப்படுகின்றன.

ஆபத்தானதா?

ஆபத்தானதா?

இந்த மாதிரியான மஞ்சள் நிற வெளிப்பாடு நிகழ்வது பாதுகாப்பானதா என்றால், இது சற்று ஆபத்தானது என்று தான் கூற வேண்டும். ஆபத்தானது என்பதை விட ஆபத்தை பற்றி எடுத்து உரைக்கும் ஒரு அறிகுறி என்றே கூறலாம்.

பிறப்புறுப்பில் நிகழும் திரவ வெளிப்பாடு மாற்றம் அடைந்தால், அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பிறப்புறுப்பில் வெளிப்படும் திரவம் அதிக வாடையை ஏற்படுத்தினால், நிறம் மாறி இருந்தால், தொடர்ந்து அதிகமாகவோ, மிகக்குறைவாகவோ வெளிப்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

ஏன் வெளிப்படுகிறது?

ஏன் வெளிப்படுகிறது?

பிறப்புறுப்பில் வெள்ளையோ மஞ்சளோ சிவப்போ - ஏன் திரவம் வெளிப்படுகிறது, அதற்கு என்ன காரணம் என்றால், பிறப்புறுப்பு மற்றும் கருப்பையில் காணப்படும் பாக்டீரியாக்கள், இறந்த செல்கள், வளர்ச்சி குன்றிய செல்கள், பழைய செல்கள் போன்றவற்றை வெளியேற்றி பிறப்புறுப்பை சுத்தமாக்கவே பிறப்புறுப்பில் திரவம் வெளிப்படல் நிகழ்கிறது.

குளிக்கும் பொழுது உடலில் அதிக அழுக்குகள் சேர்ந்து இருந்தால் அதிக அழுக்குகள் தேய்க்க தேய்க்க வெளிப்படும்; அது போல, பிறப்புறுப்பில் ஏற்படும் அழுக்குகளை வெளியேற்ற தான், இந்த திரவ வெளிப்பாடு நிகழ்கிறது; அழுக்குகளின் அளவிற்கேற்ப திரவ வெளிப்பாட்டின் அளவும் மாறுபடும்.

இப்பொழுது கர்ப்பிணிகளின் உடலில் நிகழும் மஞ்சள் நிற வெளிப்பாட்டிற்கான முக்கியமான நான்கு காரணங்கள் என்னென்ன என்று படிக்கலாம்.

ஈஸ்ட்ரோஜன்

ஈஸ்ட்ரோஜன்

கர்ப்பிணிகளின் உடலில் அதிகமான ஈஸ்ட்ரோஜன் வெளிப்பட்டால், அவர்களின் உடலில் மஞ்சள் நிற பிறப்புறுப்பு வெளிப்பாடு நிகழலாம். கர்ப்பிணிகளின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன; அவற்றுள் மிக முக்கியமானது இந்த ஈஸ்ட்ரோஜன் தான். இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகப்படுத்துவது உடலில் காணப்படும் கெட்ட கொழுப்புகள், மனஅழுத்தம், நார்ச்சத்து உடலில் குறைந்து காணப்படல் போன்றவை ஆகும்.

ஈஸ்ட் தொற்றுகள்

ஈஸ்ட் தொற்றுகள்

ஈஸ்ட் தொற்றுகள் கர்ப்பிணிகளின் உடலில் ஏற்பட்டு இருந்தால், பிறப்புறுப்பில் அதிகமான பாதிப்புகள் நிகழலாம். ஈஸ்ட் தொற்று பிறப்புறுப்பில் ஏற்பட்டால், உடலின் ஆரோக்கியத்தை பற்பல நோய்களை ஏற்படுத்தி கெடுத்து விடும். இந்த ஈஸ்ட் தொற்றால் தான் பிறப்புறுப்பில் மஞ்சள் நிற வெளிப்பாடு கூட ஏற்படுகிறது.

பாக்டீரியா தொற்றுகள்

பாக்டீரியா தொற்றுகள்

பிறப்புறுப்பில் அல்லது உடலில் அதிகமான பாக்டீரியா நோய்த் தொற்றுகள் காணப்பட்டால், அவை உடலுக்கு பலவிதமான கெடுதலை ஏற்படுத்தும். அவற்றுள் முக்கியமான கெடுதல் தான் பிறப்புறுப்பில் ஏற்படும் மஞ்சள் நிற வெளிப்பாடு. மஞ்சள் நிற வெளிப்பாடு உடலின் ஆரோக்கியமற்ற, உடலில் நோய்கள் குடி கொண்ட நிலையை குறிக்கிறது.

STD

STD

Sexually Transmitted Diseases (STD's) என்பது உடலுறவால் ஏற்படக் கூடிய பாலியல் நோய்களை குறிக்கிறது. கர்ப்பிணிகள், பெண்கள், ஆண்கள் என இவரின் உடலில் மஞ்சள் நிற வெளிப்பாடு ஏற்பட்டாலும், அதன் காரணம் பாலியல் நோய்களாக இருக்க வாய்ப்பு உள்ளது; மஞ்சள் நிற வெளிப்பாட்டுடன் அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால் பயம் கொள்ள வேண்டாம்; ஆனால், அதுவே மஞ்சள் நிறம், கிரே எனும் பழுப்பு நிறம், பச்சை நிறம் போன்ற வண்ணங்களில் பிறப்புறுப்பு வெளிப்பாடு ஏற்பட்டால், கூடவே மோசமான வாடை ஏற்பட்டால் அது கவலைப்பட வேண்டிய நேரம். ஆகையால், இந்த நிற வெளிப்பாடு ஏற்பட்ட உடனேயே மருத்துவரை அணுகுதல் வேண்டும்.

தடுப்பது எப்படி?

தடுப்பது எப்படி?

பிறப்புறுப்பின் இந்த அசாதாரண மாற்றத்தை தடுக்க, தவிர்க்க பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; பிறப்புறுப்பை கழுவிய பின் அல்லது குளித்த பின், சுத்தமாக துடைக்க வேண்டும், துடைத்த பின் தான் ஆடை அணிய வேண்டும். சுத்தமான உள்ளாடைகள் பயன்படுத்த வேண்டும், தினசரி துடைத்து பயன்படுத்த வேண்டும்.

பிறப்புறுப்பில் நீரை பொழிச்சல் அதாவது ஊற்றிக்கொண்டே இருக்க கூடாது; பிறப்புறுப்பு மற்றும் உடலுக்கு அதிக மணம் வீசக்கூடிய சோப்பு, ஷாம்பு, கண்டிஷனர், மாஸ்டரைசர் என எதையும் பயன்படுத்தாமல், வேதிப்பொருட்கள் கலக்காத இயற்கை பொருட்களை பயன்படுத்த முயல வேண்டும். மாதவிடாய் காலத்தில் தூய்மையான பேடை பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ள வேண்டும்; மிக அதிகமாக உடலுறவு கொள்வதை தவிர்த்து, சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட அளவில் உடலுறவு கொள்ள வேண்டும்.!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yellow Vaginal Discharge During Pregnancy: Causes, Remedies

Yellow Vaginal Discharge During Pregnancy: Causes, Remedies
Story first published: Thursday, August 16, 2018, 12:18 [IST]
Desktop Bottom Promotion