For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகள் பாலடைக்கட்டி உண்ணலாமா? கூடாதா?

கர்ப்பகாலம் என்பது பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம்; கர்ப்ப காலத்தில் பாலடைக்கட்டி உண்பது கருவிற்கு பாதிப்பினை ஏற்படுத்துமா, கர்ப்பிணிகள் பாலடைக்கட்டி உண்ணலாமா? கூடாதா? என்று இங்கு படிக்கலா

|

கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக, பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்; ஏனெனில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் ஒரு குழந்தை வளர்கிறது; ஆகையால், பெண்கள் தங்கள் உடல் நலத்தின் நன்மையை கருத்தில் கொள்வதோடு தனக்குள் வளரும் குழந்தையின் நலத்தையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

When Pregnant Women Can Eat Cheese

கர்ப்பிணிகள் தங்களின் நலம் மற்றும் உங்களுக்குள் வளரும் குழந்தையின் நலம் இவற்றை கருத்தில் வைத்து உண்ணும் உணவுகளை தேர்ந்தெடுத்து, எது நன்மை செய்யும், எது தீமை பயக்கும் என்று தெரிந்து உண்ணுதல் வேண்டும். இந்த பதிப்பில் கர்ப்ப காலத்தில் பெண்கள் பாலடைக்கட்டியை உண்ணலாமா? கூடாதா? என்று படித்து அறியலாம், வாருங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவில் அவசியம் ஏன் தேவை?

உணவில் அவசியம் ஏன் தேவை?

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களுக்கு பிடித்த உணவுகள் மற்றும் சில குறிப்பிட்ட உணவு வகைகளை உண்ண வேண்டும் என்ற ஆசை கொண்டு இருப்பர். கர்ப்பிணி பெண்களுக்கு உணவினை மீது இந்த ஆசை மற்றும் ஆவல் ஏன் ஏற்படுகிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன.

இந்த ஹார்மோன் மாற்றங்களால் தான், பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது பல வகைப்பட்ட பிடித்த உணவுகளை உண்ண ஆசை கொள்கின்றனர்.

சத்துக்களுக்காக தான் ஆசை எழுகிறதா?

சத்துக்களுக்காக தான் ஆசை எழுகிறதா?

பெண்களின் உடலில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், அவர்களை சாப்பிட தூண்டுகிறது என்று பார்த்தோம் அல்லவா! எந்த சத்து தேவையோ, அதை பெறுவதற்கு அல்லது அதை பெறும் வகையில் கர்ப்பிணி பெண்களின் உடலில் உணவை உண்ணுவதற்கான தூண்டுதல் ஏற்படுகிறது.

இந்த சத்துக்களின் தேவை என்பது குழந்தையின் வளர்ச்சிக்கும் தேவையான முக்கிய சத்துக்கள் தான்; இச்சத்துக்கள் பெண்ணின் உடலுக்கு கிடைத்தால் கர்ப்பிணியின் நலமும் குழந்தையின் நலமும் கட்டாயம் மேம்படும்.

என்னென்ன சத்துக்கள் - எந்த உணவுகள்?!

என்னென்ன சத்துக்கள் - எந்த உணவுகள்?!

கர்ப்பிணி பெண்ணின் உடல் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விட்டால், அந்த சமயத்தில் பெண்களுக்கு ஊறுகாய் சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழும்; அதே போல் கர்ப்பிணி பெண்களின் உடலில் இரும்பு சத்துக்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய ஐஸ்கட்டிகளை உண்ண விரும்புவர். உயர் கொழுப்பு டயட்டிற்கான சத்துக்கள் ஆப்பிளில் நிறைந்துள்ளது; பெண்களின் உடலில் கொலஸ்ட்ரால் அளவை சமநிலை படுத்த, அவர்கள் ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படும்.

வைட்டமின் பி சத்துக்கள் பெண்ணின் உடலுக்கு தேவை எனில், அந்த சமயம் அவர்களின் உடலில் நிலக்கடலை வெண்ணெய் சாப்பிடுவதற்கான ஆவல் ஏற்படும்.

பாலாடைக்கட்டி தேவையா?

பாலாடைக்கட்டி தேவையா?

கர்ப்பிணிகளின் உடலுக்கு அதிகப்படியான புரதம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் தேவை எனில், அந்த சமயம் அவர்தம் உடலே பாலாடைக்கட்டியை உண்ண வேண்டும் என்ற ஆசையை தூண்டும். இந்த புரதம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களின் தேவைக்காக கர்ப்பிணி பெண்கள் அதிகமாக பால், பால் சார்ந்த பொருட்கள், கிரீக் யோகர்ட், தயிர் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற ஆசைப்படுவர்.

பாலாடைக்கட்டி பாதுகாப்பானது தானா?

பாலாடைக்கட்டி பாதுகாப்பானது தானா?

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில், தனக்குள் ஒரு உயிர் வளரும் சூழலில் உண்ணும் உணவுகளை செய்யும் செயல்களை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும். அந்த வகையில் பெண்கள் பாலாடைக்கட்டியை உண்பது அவர்களின் உடலுக்கும், குழந்தையின் உடலுக்கும் பாதுகாப்பானது தானா என்று யோசித்து செயல்படல் வேண்டும்.

பாலாடைக்கட்டியை உண்ண தேர்ந்து எடுக்கும் பொழுது, சரியான பாலாடைக்கட்டி வகை எது? எந்த பாலாடைக்கட்டியை உண்ணலாம்? எதை உண்ணக் கூடாது என்று அடுத்த பத்தியில் பார்க்கலாம்.

எது சரியான ரகம்?

எது சரியான ரகம்?

கர்ப்பிணி பெண்கள் உண்ண கூடிய பாலாடைக்கட்டி எது என்று பார்த்தால், பதப்படுத்திய பாலாடைக்கட்டி தான். பெண்களின் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் கால்சியம் போன்றவற்றை பதப்படுத்திய, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் தூய்மையான முறையில் தயாரிக்கப்பட்ட பாலாடைகட்டிக்களை மட்டுமே கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டும்.

இதே வகையில் தயாரிக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களை மட்டும் பெண்கள் உண்ண தேர்ந்து எடுப்பது அவர்களுக்கும், அவர்தம் குழந்தைக்கும் மிகவும் நல்லது.

எதை தவிர்க்க வேண்டும்?

எதை தவிர்க்க வேண்டும்?

காய்ச்சாத பால், பதப்படுத்தப்படாத பாலாடைக்கட்டிகள், பால் பொருட்கள் போன்றவற்றை கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் தூய்மைப்படுத்தப் படாத பால், பால் பொருட்களில் லிஸ்டிரியா என்னும் நோயை உண்டாக்கும் பாக்டீரியா இருக்கும்; அது கர்ப்பிணியின் நலத்தையோ, குழந்தையின் நலத்தையோ பாதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

முன்னெச்சரிக்கை மற்றும் கவனம்!

முன்னெச்சரிக்கை மற்றும் கவனம்!

பதப்படுத்த படாத பாலாடைக்கட்டி மற்றும் பால் பொருட்களில் இருக்கும் பாக்டீரியா லிஸ்டிரியா நோயை கர்ப்பிணியின் உடலில் கண்டிப்பாக ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உண்டு; அது உயிருக்கே கூட உலை வைக்கவும், வளர்ச்சியை பாதிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே, தேவையற்ற சங்கடங்களை, உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களை தடுக்க கர்ப்பிணிகள் கவனமாக இருந்து உட்கொள்ளும் பாலாடைக்கட்டிகளை சரியாக தேர்ந்து எடுத்து உண்ணுதல் வேண்டும். பாலாடைக்கட்டிகள் மட்டும் இன்றி அனைத்து வகை உணவுகளை உண்ணும் பொழுதும் முன்னெச்சரிக்கையாக இருந்து உட்கொள்ளல் நன்று.!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Pregnant Women Can Eat Cheese?

When Pregnant Women Can Eat Cheese?
Story first published: Wednesday, September 5, 2018, 11:38 [IST]
Desktop Bottom Promotion